

‘மன்மதன்’, ‘வல்லவன்’ திரைப்பட விவகாரத்தில் தயாரிப்பாளர் தேனப்பன் மீது நடவடிக்கை எடுக்குமாறு காவல் ஆணையரிடம் நடிகர் டி.ராஜேந்தர் புகார் கொடுத்துள்ளார்.
சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதனை, திரைப்பட நடிகரும், இயக்குநருமான டி.ராஜேந்தர் நேற்று நேரில் சந்தித்து ஒரு புகார் கொடுத்தார். பின்னர், வெளியே வந்த அவர் செய்தியாளர்களிடம் கூறியதா வது:
என் மகன் சிம்பு கதை, திரைக்கதை எழுதி, இயக்கி கதாநாயகனாக நடித்த படம் ‘மன்மதன்’. எனவே, கதாசிரியர் என்ற முறையில் அந்த படத்தின் தெலுங்கு டப்பிங் உரிமையை எனது சிம்பு சினி ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பில் விற்பனை செய்தோம். அந்த படத்தை இந்தி மற்றும் வட மாநில மொழிகளில் வெளியிடவும் உரிமை பெற்றுள்ளோம்.
தமிழில் 2003-ல் வெளியான இந்த படத்தை இந்தியில் எடுக்க வேண்டும், என் மகன் சிம்புவை இந்தியில் அறிமுகம் செய்ய வேண் டும் என்று காத்திருந்தேன்.
ஆனால், தற்போது தமிழ் திரைப்படங்களில் சிம்பு பிஸியாகி விட்டார். இதனால், இந்தி உள்ளிட்ட வட மாநில மொழிகளுக்கான டப்பிங் உரிமையை விற்க முடிவு செய்தேன். ஆனால், திரைப்பட தயாரிப்பாளர் தேனப்பன் வேண்டு மென்றே ‘மன்மதன்’, ‘வல்லவன்’ திரைப்படங்களை விற்க விட மாட்டேன் என்று மிரட்டினார். இந்த 2 படங்களின் டப்பிங் உரிமையை வாங்கி இருப்பதாக தயாரிப்பாளர் தேனப்பன், எஸ்.என்.மீடியா உரி மையாளர் சஞ்சய்குமார் லால் வானி ஆகிய இருவரும் தவறான தகவல்களை வெளியிடுகின்றனர்.
அந்தப் படங்களின் டப்பிங் உரிமை தங்களிடம் இருப்பதாக தவறான விளம்பரங்களையும் வெளியிட்டு வருகின்றனர். அவர் கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு காவல் ஆணையரிடம் தெரிவித் துள்ளேன் என்றார்.