Last Updated : 03 Dec, 2018 12:32 PM

 

Published : 03 Dec 2018 12:32 PM
Last Updated : 03 Dec 2018 12:32 PM

ஜாக்டோ-ஜியோ போராட்டத்துக்கு தடை கோரி உயர் நீதிமன்றத்தில் முறையீடு

நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் நடைபெற உள்ள ஜாக்டோ-ஜியோ போராட்டத்திற்கு தடை கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

லோகநாதன் என்பவர், வழக்கறிஞர் செல்வம், நீதிபதிகள் சசிதரன், சுவாமிநாதன் அமர்வு முன்பாக, "பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி செவ்வாய்க்கிழமை முதல் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்துள்ளனர்.

டிசம்பர் 10-ம் தேதி முதல் 10,11,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அரையாண்டு பொதுத்தேர்வு நடைபெற உள்ளது. ஜாக்டோ-ஜியோ அமைப்பினரின் போராட்டத்தால், மாணவர்களும், பொதுமக்களும் மிகுந்த சிரமத்திற்குள்ளாவர்.

அதோடு, தமிழ்நாடு அரசுப் பணியாளர் சட்டப்படி, அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட அனுமதி இல்லை. ஆகவே ஜாக்டோ-ஜியோ அமைப்பினரின் வேலை நிறுத்தத்திற்கு தடை விதிக்க வேண்டும்" என முறையிட்டார்.

ஜாக்டோ-ஜியோ தரப்பு வழக்கறிஞர், இது தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நிலுவையில் உள்ளதாகத் தெரிவித்தார். இதையேற்ற நீதிபதிகள் ஜாக்டோ-ஜியோ தொடர்பான வழக்குகளை மதியம் 1 மணிக்கு விசாரிப்பதாக தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x