

சென்னை பச்சையப்பன் அறக் கட்டளை வணிக நோக்கில் செயல் படுவதால், அதை நிர்வகிக்க 3 பேர் குழுவை அமைக்கக் கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதுகுறித்து அறக்கட்டளை நிர்வாகம் பதில் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.பி.சிவசுப்பிரமணியன், வழக்கறிஞர் எஸ்.துரைசாமி ஆகி யோர் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் படித்தவர்கள். அவர் கள் இருவரும் உயர் நீதி மன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:
பச்சையப்பன் அறக்கட்டளை, தேர்ந்தெடுக்கப்பட்ட அறங்காவலர் களால் நிர்வகிக்கப்படுகிறது. சென்னை உயர் நீதிமன்ற உத்த ரவுப்படி, ஓய்வு பெற்ற நீதிபதி பி.சண்முகம் இந்த அறக்கட்டளை யின் இடைக்கால நிர்வாகியாக நியமிக்கப்பட்டு, அவரது கண்காணிப்பில் அறக்கட்டளை நிர்வாகம் செயல்பட்டு வருகிறது.
ஆனால், அறப்பணிகள் மற்றும் கல்வி மேம்பாட்டுக்காக நிறுவப் பட்ட பச்சையப்பன் அறக்கட்டளை யின் நோக்கம் தற்போது முற்றிலு மாக வணிகரீதியாக மாறியுள்ளது. அறக்கட்டளையின் கீழ் செயல்படும் பச்சையப்பன், கந்தசாமி நாயுடு கல்லூரிகளில் உள்ள விளையாட்டு மைதானங்களில் திருமண மண்ட பம் கட்டப்பட்டு வருகிறது.
இதற்கு அறக்கட்டளை நிர்வாக மும் அனுமதி அளித்துள்ளது. ஆனால், உயர் நீதிமன்றத்திடம் இதற்கு முன்அனுமதி பெற வில்லை.
அதேபோல அறக்கட்டளைக்கு சொந்தமான காலியிடங்கள் கடை களாக மாறிவருகின்றன.
இவ்வாறு திருமண மண்டபங் கள், கடைகள் கட்டுவதில் பல்வேறு நிதி முறைகேடுகள் நடந்துள்ளதாக இடைக்கால நிர்வாகி தெரிவித்துள்ளார். அறக் கட்டளையின் நிதிநிலை மோசமான நிலையில் இருப்பதாக தணிக்கை அதிகாரிகளும் அறிக்கை அளித் துள்ளனர்.
விதிமுறைகளில் சட்டத் திருத்தம்
எனவே, இந்த அறக்கட்ட ளையை நிர்வகிக்க 3 பேர் அடங் கிய நிபுணர் குழுவை அமைத்து உத்தரவிட வேண்டும். அறக்கட் டளை நிர்வாகம் தொடர்பான விதிமுறைகளில் சட்டத் திருத்தம் கொண்டுவர வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கை நீதிபதி கே.கல்யாணசுந்தரம் விசாரித்து, இதுதொடர்பாக பச்சையப்பன் அறக்கட்டளை நிர்வாகக் குழு 2 வாரத்தில் பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தார்.