

சென்னை: கோடைக்கால மின் தேவைக்காக 1,500 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்ய விரைவில் டெண்டர் கோரப்படவுள்ளதாக, மின்வாரியம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது: கோடைகாலத்தில் மின்தேவையை பூர்த்தி செய்ய கடந்த காலங்களில் குறுகிய கால ஒப்பந்தங்கள் மூலம் வெளிசந்தைகளில் மின்சாரம் பெறப்பட்டது. இதனால் அதிகமாக செலவு ஏற்படுகிறது.
இந்நிலையில், 5 ஆண்டுகளுக்கு மின்சாரம் பெறும் வகையில், நடுத்தர கால ஒப்பந்தம் கோர மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் அனுமதி கோரியிருந்த நிலையில், தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளது. டெண்டர் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும். இவ்வாறு கூறினர்.