

சென்னை: பட்டினப்பாக்கம் பேருந்து பணிமனை அருகே தேர்தல் பறக்கும் படையினர் நேற்று முன்தினம் இரவு வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது, அந்த வழியாக வந்த கார் ஒன்றை நிறுத்தி சோதனையிட்டதில், அதில் பயணித்தவரிடம் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.1.50 லட்சம் இருந்ததால், பறக்கும் படையினர் பறிமுதல் செய்து விசாரித்தனர்.
இதில், பணத்துடன் பிடிபட்டவர் மியான்மரில் வசிக்கும் வெளிநாடு வாழ் இந்தியரான ராஜு என்பதும், ஆர்.ஏ.புரத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்காக பணம் கொண்டு வந்ததும் தெரியவந்தது. இருப்பினும், பணத்துக்கான ஆவணங்கள் இல்லாததால் அந்த பணம் அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.