

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தந்தை, தாத்தாவை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
உடுமலையை பகுதியை சேர்ந்தவர் கதிரவன் (45) . கூலி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி இறந்து விட்டார். இவருக்கு இரு மகள்கள் உள்ளனர்.
மூத்த மகள் பத்தாம் வகுப்பு வரை படித்துவிட்டு பள்ளி செல்லாமல் வீட்டில் இருந்து வருகிறார். 2-வது மகள் 7-ம் வகுப்பு படித்து வருகிறார். இந் நிலையில் தந்தையும், அவரது தாத்தாவும் சில நாட்களாக சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தனராம்.
இது குறித்து திருப்பூர் குழந்தை தொழிலாளர் பாதுகாப்புத் திட்ட ஒருங்கிணைப்பாளர் தினேஷ்குமாரிடம் பாதிக்கப்பட்ட சிறுமி புகார் தெரிவித்தார். இதையடுத்து உடுமலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து சிறுமியின் தந்தை கதிரவன், தாத்தா வையாபுரி (74) ஆகியோரை கைது செய்தனர்.