ஜிப்மரில் முதல்முறையாக மருத்துவ மேற்படிப்புக்கான கலந்தாய்வு: வெள்ளிக்கிழமை நேரடி ஒளிபரப்பு

ஜிப்மரில் முதல்முறையாக மருத்துவ மேற்படிப்புக்கான கலந்தாய்வு: வெள்ளிக்கிழமை நேரடி ஒளிபரப்பு
Updated on
1 min read

ஜிப்மர் முதல் முறையாக மருத்துவ மேற்படிப்புக்கான கலந்தாய்வை நாளை (வெள்ளிக்கிழமை) நேரடி ஒளிபரப்பு செய்கிறது. வரும் காலத்தில் எம்பிபிஎஸ் கலந்தாய்வுக்கும் இம்முறை பயன்படுத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக ஜிப்மர் இயக்குநர் சுவாமிநாதன் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், ''ஜிப்மர் மருத்துவமனையில் டிசம்பர் 21-ம் தேதி (நாளை) காலை மருத்துவ மேற்படிப்பு (DM, MCh) நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கான கலந்தாய்வு நடக்கிறது. இது முதல் முறையாக நேரடி ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. இதன் மூலம் கலந்தாய்வு வெளிப்படையாக நடப்பது தெரியவரும். இந்தக் கலந்தாய்வை ஜிப்மர் இணையதளத்தில் பார்க்கலாம்.

மருத்துவக் கலந்தாய்வு இந்திய அளவில் அரசு மருத்துவ நிறுவனத்தில் நேரடி ஒளிபரப்பு செய்வது இதுவே முதல் முறை. வரும் காலத்தில் எம்பிபிஎஸ் மருத்துவக் கலந்தாய்வுக்கும் இம்முறை பயன்படுத்தப்படும்'' என்று தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in