காற்றழுத்த சுழற்சியால் சென்னையில் நாளை முதல் மழை: வானிலை ஆய்வாளர் செல்வகுமார்

காற்றழுத்த சுழற்சியால் சென்னையில் நாளை முதல் மழை: வானிலை ஆய்வாளர் செல்வகுமார்
Updated on
1 min read

வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்று சுழற்சி நீண்டு வருவதால் நாளை முதல் இரண்டு நாட்களுக்கு சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் மிதமானது முதல் கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் செல்வகுமார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:

வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்று சுழற்சி இன்று காலை நிலவரப்படி தற்போது இலங்கையிக்கு திரிகோணமலைக்கு வடக்கே நிலை கொண்டுள்ளது. இது நேற்றைய நிலவரத்தைவிடவும் சற்று நீண்டுள்ளது. 

இந்த காற்று சுழற்சி நாளை டிசம்பர் 23 கொழும்பு அருகே மன்னார்வளைகுடா ,இந்தியப்பெருங்கடல் இணையும் இடத்தில் இறங்கும் போது வரும். இதனால் தமிழகத்துக்கு கூடுதல் மழை பெய்யும்.

இதனால் சென்னை உட்பட தமிழகத்தின் வட தமிழக பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையை பொறுத்தவரை நாளை காலை முதல் மழை பெய்யும். விட்டு விட்டு பெய்யும். ஓரிரு முறை கனமழை பெய்யவும் வாய்ப்புள்ளது. சென்னை மட்டுமின்றி திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூரிலும் மழை பெய்யும்.

கிருஷ்ணகிரி, மைசூர் ,பெங்களூரில் கூட டிசம்பர் 24 தூறும் ,  கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல் பகுதிகளிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளது. 24-ம் தேதி திங்கள் கிழமை உள் மாவட்டங்களிலும் மழை பெய்யும். ஆனால் வட கடலோர மாவட்டங்களை விட உள் மாவட்டங்களில் குறைவான மழை பெய்யும்.

நாகை ,திருவாரூர் ,தஞ்சாவூர் ,காரைக்கால், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, திருச்சி, சிவகங்கை, திண்டுக்கல் ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களிலும் ஆங்காங்கே மாறி மாறி  மிதமான மழை பெய்யும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in