

ஆதம்பாக்கம், பாரதியார் நகரைச் சேர்ந்த தொழிலதிபர் அறிவுநம்பி (36). இவர் சென்னையில் ஆதம்பாக் கம், மடிப்பாக்கம், கீழ்கட்டளை, மேட வாக்கம், புனிததோமையார் மலை, அடையாறு. திருவான்மியூர், நீலாங் கரை, துரைப்பாக்கம் உள்ளிட்ட இடங் களில் வீடுகளை வாடகைக்கு எடுத்து அந்த வீடுகளைச் சட்ட விரோதமாக லீஸுக்கு விட்டுள்ளார்.
மேலும், வீட்டு உரிமையாளர்களுக்கு வாடகை கொடுக்காமலும், லீசுக்கு பணம் பெற்றவர்களுக்கு அதைத் திருப்பி கொடுக்காமலும் 168 பேரிடம் ரூ.5 கோடிவரை மோசடி செய்ததாக சென்னை காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதனிடம் புகார் தெரிவிக்கப் பட்டது. இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர்.
இதைத் தொடர்ந்து தலை மறைவாக இருந்த அறிவு நம்பியை போலீஸார் கைது செய்தனர். பின்னர், அவரை ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நீதிமன்ற காவலில் அவரை புழல் மத்திய சிறையில் அடைத்தனர்.