30 நாட்களுக்குள் ஆவணங்களை அளித்து விற்பனை பத்திரம் பெறாவிட்டால் ஒதுக்கீடு ரத்து: வீட்டுவசதி வாரியம் அறிவிப்பு 

30 நாட்களுக்குள் ஆவணங்களை அளித்து விற்பனை பத்திரம் பெறாவிட்டால் ஒதுக்கீடு ரத்து: வீட்டுவசதி வாரியம் அறிவிப்பு 
Updated on
1 min read

ஜெ.ஜெ.நகர் கோட்டத்துக்குட்பட்ட திட்டப் பகுதிகளில் மனை, குடி யிருப்பு ஒதுக்கீடு பெற்றவர்கள், 30 நாட்களுக்குள் உரிய ஆவணங் களை அளித்து விற்பனை பத்தி ரத்தை பெற்றுக் கொள்ளாவிட்டால் ஒதுக்கீடு ரத்து செய்யப்படும் என்று வீட்டுவசதி வாரியம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம், ஜெ.ஜெ.நகர் கோட்டத்துக்குட்பட்ட முகப்பேர் கிழக்கு மற்றும் மேற்கு, முகப்பேர் ஏரி, முகப்பேர் ஏரி நிலவங்கி, அம்பத்தூர் பகுதி 1, 2, 3, நொளம்பூர் திட்டப்பகுதி 1, 2, ஆவடி, திருமுல்லைவாயல் ஆகிய திட்டப்பகுதிகளில் மனைகள், அடுக்குமாடி குடியிருப்புகள் ஒதுக் கப்பட்டுள்ளன. இதில் ஒதுக்கீடு பெற்றவர்கள் முழுத்தொகை செலுத்தி இருப்பின், இந்த அறி விப்பு வெளிவந்த 30 நாட்களுக்குள் நேரில் வந்து, தேவையான ஆவ ணங்களை சமர்ப்பித்து விற்பனை பத்திரம் பெற்றுக் கொள்ளலாம். தவறும்பட்சத்தில் ஒதுக்கீடு ரத்து செய்யப்படும்.

குறிப்பாக, ரூ.20 பெறுமான முத்திரைதாளில் தட்டச்சு செய்த உறுதி அறிக்கை, ஆளறி சான்றிதழ் (PHOTO IDENTIFICATION) அரசு அங்கீகாரம் பெற்ற அலுவலரிடம் கையொப்பம் பெற்று சமர்ப்பிக்க வேண்டும். ஆய்வுக் கட்டணத்தை அலுவலக காசாளர் பிரிவில் செலுத்தி அதற்கான ரசீதை சமர்ப் பிக்க வேண்டும்.

குடியிருப்புக்குரிய தொகையை செலுத்த வங்கியில் கடன் பெற்றி ருந்தால், அந்த வங்கியில் இருந்து தடையில்லா சான்று பெற்று சமர்ப் பிக்க வேண்டும். ஆதார், குடும்ப அட்டை, வருமானவரி அட்டை ஆகிய அடையாள அட்டையின் நகல் சமர்ப்பிக்கப்பட வேண்டும். அப்போது அசல் ஆய்வுக்கு உட்படுத்தப்படும்.

நிலுவைத் தொகை ஏதேனும் செலுத்த வேண்டியிருப்பின், ஒதுக்கீட்டுதாரர்கள் தங்களிடம் உள்ள ரசீதுகளை சமர்ப்பித்து, கணக்குகளை நேர் செய்து கொள்ள வேண்டும். இவற்றை சமர்ப்பித்து விற்பனை பத்திரம் பெற்றுக் கொள்ளலாம்.

ஒதுக்கீடுதாரர்கள் பெயர், மனை எண், அடுக்குமாடி குடியிருப்பு எண் பற்றிய விவரங்களை தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் ‘www.tnhb.gov.in’ என்ற இணையதளத்தில் காணலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in