

பயணிகளின் நெரிசலைச் சமாளிப்பதற்காக திருச்சி புனே இடையே சென்னை எழும்பூர் வழியாக சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
திருச்சி புனே சிறப்பு ரயில் (எண்: 06801) திருச்சியில் இருந்து செப்டம்பர் 21, 28 அக்டோபர் 5 மற்றும் 26ஆகிய தேதிகளில் (ஞாயிறு) காலை 5.30 மணிக்குப் புறப்பட்டு பகல் 12 மணிக்கு சென்னை எழும்பூரை வந்தடையும். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு மறுநாள் (திங்கள்கிழமை) இரவு 7.15 மணிக்கு புனே போய்ச்சேரும்.
புனே திருச்சி சிறப்பு ரயில் (எண்: 06802) புனேயில் இருந்து செப்டம்பர் 22, 29 அக்டோபர் 6 மற்றும் 27-ம் தேதிகளில் (திங்கள்) புறப்பட்டு செவ்வாய்க்கிழமை பிற்பகல் 12.50 மணிக்கு சென்னை எழும்பூரை வந்தடையும். பின்னர் இங்கிருந்து புறப்பட்டு அன்றைய தினம் இரவு 7.15 மணிக்கு திருச்சி சென்றடையும்.
திருச்சியில் இருந்து இந்த சிறப்பு ரயில்கள் ஸ்ரீரங்கம், விருத்தாசலம், விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம், சென்னை எழும்பூர், அரக்கோணம், திருத்தணி, புத்தூர், ரேணிகுண்டா, கூடூரு, ரஜாம்பேட்டா, கடப்பா, எர்றகுண்டா, முத்தநூறு, தாடிபத்ரி, குத்தி, குண்டக்கல், அடோனி, மந்த்ராலயம் ரோடு, ரெய்ச்சூர், யாத்கீர், வாடி, குல்பர்கா, ஜோலாப்பூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். திருச்சியில் இருந்து புறப்படும் சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு இன்று (18-9-14) தொடங்குகிறது.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.