

இன்ஹேலரில் ஆல்கஹால் இல்லை. வாகன சோதனையின் போது குடித்திருந்ததாக காட்டாது. எனவே, பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
நடிகையாகவும் பாஜக இளைஞ ரணியின் நிர்வாகியாகவும் இருப்ப வர் காயத்ரி ரகுராம். கடந்த வாரம் இவர் குடிபோதையில் காரை ஓட்டி வந்ததாக அடையாறு போக்குவரத்து புலனாய்வு போலீஸார் அபராதம் விதித்தனர். இச்சம்பவம் திரையுலகிலும், அரசியலிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் ‘காமதேனு’ வார இதழுக்கு காயத்ரி ரகுராம் அளித்தப் பேட்டியில், “எனக்கு இருக்கும் வீஸிங் ப்ராப் ளத்துக்காக இன்ஹேலர் அடிச்சி ருந்தேன். இன்ஹேலர்ல ஆல்க ஹால் இருக்கு. அதனால், போக்கு வரத்து போலீஸாரின் வாகன சோத னையில் நான் குடிச்சிருந்ததாக காட்டியிருக்கு. உங்களுக்கு சந்தேகம் இருந்தால் பிளட் டெஸ்ட் எடுத்துப் பாருங்கன்னு நான் எவ்வளவு சொல்லியும் அவங்க கேட்கவில்லை” என்று தெரிவித்திருந்தார்.
காயத்ரி ரகுராமின் விளக்கம் இன்ஹேலர் பயன்படுத்துபவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி யது. இன்ஹேலரில் ஆல்கஹால் இருக்கிறதா என இதைக் கேள் விப்பட்ட மக்கள் அதிர்ச்சி அடைந் தனர். மேலும் இன்ஹேலர் எடுத் திருக்கும் நிலையில், வாகன சோதனையின்போது மது குடித் திருப்பதாக காட்டிவிடுமோ என்ற அச்சமும் பொதுமக்களிடம் பரவி யது.
இதையடுத்து இன்ஹேலரில் ஆல்கஹால் இருப்பது உண்மையா என்று மருத்துவர்களிடம் கேட்ட போது, “மூச்சிறைப்பு நோய் (வீஸிங்) பிரச்சினை இருப்பவர் களுக்கு மருந்து, மாத்திரைகளை விட இன்ஹேலர் சிறந்தது. மருந்து, மாத்திரை என்பதை விட நேரடியாக நிவாரணம் அளிக்கும். இதில் ஆல்கஹால் இல்லை. போலீஸ் வாகன சோதனையில் சிக்கினால் கூட மது குடித்திருப்பதாக காட் டாது. ரத்த பரிசோதனை செய்தா லும் குடித்திருப்பதாக முடிவுகள் வராது. எனவே இன்ஹேலர் பயன் படுத்துபவர்கள் யாரும் பயப்பட வேண்டாம். நிம்மதியாக வாகனம் ஓட்டிச் செல்லலாம்” என்றனர்.