

அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில், பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய தையடுத்து, பெங்களூர் ஒசகொட்டா பகுதியில் குவிந்த அதிமுகவினர் 100க்கும் மேற்பட்டவர்கள் அங்கு சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை கைது செய்த போலீஸார், தமிழக - கர்நாடக எல்லையில் உள்ள அத்திப்பள்ளி வாகனங்களில் அழைத்து வந்து விட்டுவிட்டுச் சென்றனர்.
இதில் ஆத்திரமடைந்த அதிமுக வினர் கர்நாடக போலீஸாரை கண்டித்து பெங்களூர் - ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணி வகுத்து நின்றன. தகவலறிந்த மாவட்ட எஸ்பி கண்ணம்மாள் தலைமையிலான போலீஸார், மறியலில் ஈடுபட்டவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.