

இடைநிலை ஆசிரியர்களின் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் 88 பெண்கள் உட்பட 170 பேர் உடல் நலக்குறைவால் பாதிக்கப் பட்டு மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டுள்ளனர்.
சம வேலைக்கு, சம ஊதியம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர்கள் சென்னை டிபிஐ வளாகத்தை முற்றுகையிட்டு கடந்த 4 நாட்களாக தொடர் உண் ணாவிரத போராட்டத்தில் ஈடு பட்டுள்ளனர். ஒரு நபர் குழு அறிக்கை தரும்வரை போராட் டத்தை ஒத்திவைக்க தமிழகஅரசு சார்பில் அவர்களிடம் வலியுறுத்தப் பட்டது. அதை ஆசிரியர்கள் ஏற்க மறுத்தனர்.
அரசுடனான இருகட்ட பேச்சு வார்த்தைகளும் தோல்வியில் முடிந்ததை அடுத்து இடைநிலை ஆசிரியர்களின் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது.
இந்த தொடர் போராட்டத்தின் காரணமாக ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் உடல் சோர் வடைந்து காணப்பட்டனர். உடல் நலக்குறைவால் 88 பெண்கள் உட் பட 170 பேர் பாதிக்கப்பட்டு ராயப் பேட்டை அரசு மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், டிபிஐ வளாகத்தில் அலுவலக பணிகளும் பாதிக்கப் பட்டுள்ளன. அரையாண்டு விடு முறை முடிந்து பள்ளிகள் வரும் ஜனவரி 2-ம் தேதி திறக்கப்பட உள்ளன. அன்றே மாணவர்களுக்கு 3-ம் பருவத்துக்கான சீருடைகள், புத்தகங்கள் உட்பட இலவசப் பொருட்கள் வழங்கப்பட வேண்டும். அதற்குரிய பொருட்கள் எல்லாப் பள்ளிகளுக்கும் மாவட்ட கல்வி அலுவலகங்கள் மூலம் வழங்கப்பட்டு வருகின்றன.
எனினும், இடைநிலை ஆசிரியர் கள் போராட்டத்தால் கணிச மான தொடக்கப் பள்ளிகளி்ல் முன்னேற்பாடு பணிகள் தடைப் பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்க பொதுச் செயலாளர் ராபர்ட் கூறும்போது, ‘‘ஆட்சியாளர்களின் மனதில் சிறிதளவேனும் கருணை இருக்கும் என நம்புகிறோம். குழந்தைகள், பெண்கள் என பலரும் தங்களை வருத்தி அறவழியில் போராடு வதை அரசு அலட்சியம் செய்யா மல் எங்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற முன்வர வேண்டும்’’என்றார்.
அலட்சியம் கூடாது
இதற்கிடையே நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களை நேற்று சந்தித்து ஆதரவு தெரிவித்தார். தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறும் போது, ‘‘நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் ஆசிரியர்கள் 10 ஆண்டுகளாக வீதியில் இறங்கி போராடுவதை அரசு கண்டு கொள்ளாமல் இருக்கக்கூடாது. ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கையை நிறைவேற்ற அரசு முன்வர வேண்டும்’’என்றார்.