‘பாத்திரம் கொண்டுவந்தால் மட்டுமே பார்சல்’: பிளாஸ்டிக் தடையை சாத்தியமாக்கிய கோவை ஹோட்டல்

‘பாத்திரம் கொண்டுவந்தால் மட்டுமே பார்சல்’: பிளாஸ்டிக் தடையை சாத்தியமாக்கிய கோவை ஹோட்டல்
Updated on
2 min read

2019 ஜனவரி 1-ம் தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்களைப் பயன் படுத்த தடை விதித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்தத் தடை உத்தரவு அமலாக ஒரு மாதமே எஞ்சியுள்ள நிலையில், தடையை எப்படி அமல்படுத்தப்போகிறார்கள் என்ற கேள்வி அனைவரது மனதிலும் உள்ளது. ஆனால், அமல்படுத்த முடியும் என்று நிரூபித்து வருகிறது கோவையில் உள்ள ஒரு ஹோட்டல். அங்கு பார்சல் வாங்க வரும் வாடிக்கையாளர்கள் பாத்திரங்களை எடுத்துவந்துதான் உணவுப் பொருட்களை வாங்கிச் செல்கின்றனர். கடந்த ஆகஸ்ட் 15-ம் தேதி முதல் இந்த நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது.

இது எப்படி சாத்தியமானது என்பது குறித்து கோவை ராமநாத புரத்தில் உள்ள நளன் உணவகத்தின் மேலாளர் சசிக்குமார் கூறியதாவது: தடையை அமல்படுத்துவதற்கு 2 மாதங்களுக்கு முன்பே, எங்கள் கடைக்கு வரும் வாடிக்கையாளர் களிடம் எப்போது முதல் அமல் படுத்தப்போகிறோம் என்பதை தெரி வித்துவிட்டோம். இதுதொடர்பாக கடையிலும் அறிவிப்பு செய்திருந் தோம். எனவே, எங்கள் ஹோட்ட லுக்கு தொடர்ச்சியாக வரும் வாடிக்கையாளர்கள் தற்போது பாத்திரங்களை எடுத்துவந்துதான் பார்சல் வாங்கிச் செல்கின்றனர். சாப்பாட்டை இலையில் கட்டித் தருகிறோம். சாம்பார், ரசம், கூட்டு போன்றவற்றை கேரியரில் அளிக்கிறோம். தடையை அமல் படுத்திய தொடக்கத்தில் எங்க ளுக்கு சிரமமாகத்தான் இருந்தது. புதிதாக பார்சல் வாங்க வரும் வாடிக்கையாளர்கள் ஏமாற்றுத் துடன் திரும்பிச்சென்றனர். சிலர் பாராட்டிவிட்டுச் சென்றனர். அவர் களில் சிலர் அடுத்தமுறை வரும் போது பாத்திரங்களை எடுத்துவந்த னர். வருவாய் அடிப்படையில் பார்த்தால் இந்த நடவடிக்கையால் எங்களுக்கு ஓரளவு இழப்புதான். ஆனால், அதைப் பற்றி நாங்கள் கவலைப்படவில்லை. நாளாக, நாளாக மக்கள் பழகிவிடுவார்கள் என்ற நம்பிக்கை இருந்தது. அது தான் தற்போது நடந்து வருகிறது.

அருகிலேயே மருத்துவமனை கள் இருப்பதால் அங்கிருந்து நோயாளிகளுக்காக சிலர் பார்சல் வாங்க வருகின்றனர் பாத்திரம் கொண்டு வராத காரணத்தால் அவர்களை திருப்பி அனுப்புவது எங்களுக்கு கஷ்டத்தை ஏற்படுத் தியது. அதற்கு தீர்வாக, நாங்களே கேரியரில் பார்சலை அளித்துவிட்டு, முன்பணமாக ரூ.200 பெற்றுக்கொள்கிறோம். உணவருந்தியபின் அந்த கேரியரை திருப்பி அளித்தால் முன்பணத்தை திருப்பி அளிக்கும் நடைமுறையை அமல்படுத்தியுள்ளோம். இந்த நடைமுறைக்கு தற்போது வர வேற்பு அதிகரித்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

ஹோட்டலுக்கு வந்த புலிய குளம், அம்மன் நகரைச் சேர்ந்த வாடிக்கையாளர் சாமுவேல் கூறும் போது, “பிளாஸ்டிக் பைகள் நமக்கு சில தற்காலிக சவுகரியங்களை காண்பித்துவிட்டது. அதிலி ருந்து மீண்டுவர எங்கள் குடும்பத்தினர் மனதளவில் தயா ராகிவிட்டனர். கடந்த 2 மாதங் களாக பாத்திரங்களை கொண்டு வந்துதான் பார்சல் வாங்கி வருகி றேன். பிளாஸ்டிக் பைகளில் பார்சல் வாங்குவது சவுகரியமான விஷயம்தான். இதன்மூலம், பாத் திரங்களை கழுவ தேவையில்லை. சாப்பிட்டவுடன் அப்படியே தூக்கி போட்டுவிடலாம்.

ஆனால், அதனால் ஏற்படும் பாதிப்பை யார் சரிகட்டுவது. தனிமனித மாற்றமே சமூக மாற்றம் என்பதால், மக்கள் ஒத்துழைப்பு இல்லாமல் பிளாஸ்டிக் தடையை அனைத்து இடங்களிலும் அமல் படுத்துவது சாத்தியம் இல்லாதது” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in