Published : 30 Dec 2018 10:09 AM
Last Updated : 30 Dec 2018 10:09 AM

இயக்குநர் பா.இரஞ்சித்தின் ‘நீலம்’ அமைப்பு சார்பில் வானம் கலைத் திருவிழா தொடக்கம்: பார்வையாளர்களை கவர்ந்த ஆயிரம் கலைஞர்களின் பறையிசை

‘நீலம்’ பண்பாட்டு மையம் சார்பில் 3 நாட்கள் வானம் கலைத்திருவிழா சென்னை மயிலாப்பூரில் நேற்று தொடங்கியது.

திரைப்பட இயக்குநர் பா.இரஞ்சித்தின் ‘நீலம்’ பண்பாட்டு மையம், சமூக மாற்றத்துக்கான தேடலோடு கலைத்தளத்தில் இயங்கிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், இந்த மையம் சார்பில் 3 நாட்கள் நடைபெறும் வானம் கலைத் திருவிழா சென்னை யில் நேற்று தொடங்கியது. இதில், எழுத்தாளர்கள் ஆதவன் தீட்சண்யா, ஸ்டாலின் ராஜாங்கம், ஓவியர் சந்துரு, குஜராத் எம்எல்ஏவும் தலித் இயக்க தலைவருமான ஜிக்னேஷ் மேவானி உட்பட பலர் பங்கேற்றனர்.

பறையிசையோடு திருவிழா தொடங்கியது. இதில் சிறுவர்கள், இளைஞர்கள், பெண்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்ட கலை ஞர்கள் பறையிசை பார்வையாளர் களை கவர்ந்தது. பொம்மலாட்டம், நவயான பவுத்த நாடகம், மதுரை வீரன் தெருக்கூத்து ஆகி யவை நேற்று நடந்தன. சிலம் பாட்டம், கலி நடனம் உட்பட பல்வேறு நிகழ்வுகள் இன்றும் நாளையும் நடக்கவுள்ளன. மேலும் இயற்கை காட்சிகள் மற்றும் சமத்துவத்தையும் சமூக நீதியையும் வெளியப்படுத்தும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஓவியங்கள் காட்சிப்படுத்தப்பட்டன.

ஜிக்னேஷ் மேவானி கூறும்போது, ‘‘ஜாதிதான் தேச விரோதம். தேச பக்தர்களாக கூறி வருபவர்கள் அரசியல் சாதனத்தை மதிப்பவர்களாக இல்லை. மதசார்பற்றவர்களாகவும் இல்லை. ஜாதியை குப்பைத் தொட்டியில் எறிய வேண்டும். தமிழகத்தில் எஸ்சி, எஸ்டி மீதான வன்கொடுமை அதிகரித்து வருகிறது. இதுபோன்ற நிகழ்வு களை தடுக்க ‘நீலம்’ போன்ற அமைப்புகளின் பணி தேவை’’ என்றார்.

பா.இரஞ்சித் கூறும்போது, ‘‘கலை இலக்கியம் மனித சமூகத் தில் முக்கிய ஆளுமையாக இருக் கிறது. எனவே, 3 நாட்கள் நடக்கும் இந்த திருவிழாவில் பல்வேறு முரண்பட்ட கருத்துகள் பேசப் படும். ஜாதி மோதல், பகுத்தறிவு சிந்தனை, சமூக நீதி குறித்து விரிவாக பேசப்படும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x