Published : 08 Dec 2018 09:11 am

Updated : 08 Dec 2018 09:11 am

 

Published : 08 Dec 2018 09:11 AM
Last Updated : 08 Dec 2018 09:11 AM

சென்னை விமான நிலையத்தில் 83-வது முறையாக கண்ணாடி உடைந்து விழுந்தது

83

சென்னை விமான நிலையம் ரூ.2,200 கோடி செலவில் நவீன மயமாக்கப்பட்டது. இதையடுத்து விமான நிலையத்தின் உள்நாட்டு மற்றும் பன்னாட்டு முனையத்தில் கண்ணாடிகள், மேற்கூரைகள் விழும் சம்பவம் அடிக்கடி நடந்து வருகிறது. இதில், அதிர்ஷ்டவசமாக உயிரிழப்புகள் எதுவும் நடக்கவில்லை. ஆனால், பயணிகள், பயணிகளை வழி யனுப்ப வந்தவர்கள், பாதுகாப்பு வீரர்கள் என சுமார் 14 பேர் இதுவரை காயமடைந்துள்ளனர்.

இந்நிலையில் நேற்றுமுன்தினம் நள்ளிர வில் விமான நிலைய உள் நாட்டு முனையம் புறப்பாடு பகுதி 3-வது நுழைவு வாயிலின் மேல்பகுதியில் இருந்த கண்ணாடி திடீரென்று பெயர்ந்து கீழே விழுந்து உடைந்தது. அந்த இடத்தில் பயணிகள் உட்பட யாரும் இல்லாததால், அசம்பாவிதம் எதுவும் நடக்கவில்லை. 83-வது முறையாக இந்த விபத்து நடந்துள்ளது என்று கூறப்பட்டது. ஆனால், இது 69-வது முறை என்று விமான நிலைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author