

கஜா புயலால் பாதிக்கப்பட்ட தமிழ கத்துக்கு மத்திய வேளாண் அமைச் சகம் சார்பில் ரூ.173 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
கஜா புயல் காரணமாக டெல்டா மாவட்டங்களில் பேரழிவு ஏற்பட்டது. இதில், பல்லாயிரக் கணக்கான மின் கம்பங்கள், லட்சக்கணக்கான தென்னை மரங்கள் சாய்ந்தன. ரூ.15 ஆயிரம் கோடி நிதி வழங்குமாறு, மத்திய அரசுக்கு தமிழக அரசு கோரிக்கை விடுத்தது.
புயல் பாதித்த பகுதிகளில் ஆய்வு மேற்கொண்ட மத்தியக் குழுவினர், மத்திய அரசிடம் அறிக்கை சமர்ப்பித்தனர். இதை யடுத்து, மத்திய அரசு, துறை வாரியாக நிதி வழங்கி வருகிறது.
இந்த நிலையில், தமிழக கால்நடைத் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், டெல்லியில் மத்திய வேளாண்மைத் துறை அமைச்சர் ராதா மோகன்சிங்கை சந்தித்து, டெல்டா மாவட்டங்களில் சேதமடைந்த பயிர்களுக்கு, நிவாரண நிதி வழங்குமாறு கேட்டுக்கொண்டார். மேலும், சேத விவரங்கள், இழப்பீடு தொடர்பாக மனுவும் அளித்தார்.
இதை ஏற்றுக் கொண்ட மத்திய அமைச்சர் ராதா மோகன்சிங், கஜா புயல் பாதித்த பகுதிகளில், சீரமைப்புப் பணிக்காக மத்திய வேளாண்மைத் துறை சார்பில் ரூ.173 கோடி ஒதுக்கீடு செய்வ தாக அறிவித்ததாகவும், இதில், தென்னை மரங்களுக்கு ரூ.93 கோடி, தோட்டப் பயிர் சாகுபடிக்கு ரூ.80 கோடி ஒதுக்கப்பட்டுள்ள தாகவும் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.புயல் பாதித்த பகுதிகளில் ஆய்வு மேற்கொண்ட மத்தியக் குழுவினர், மத்திய அரசிடம் அறிக்கை சமர்ப்பித்தனர். இதை யடுத்து, மத்திய அரசு, துறை வாரியாக நிதி வழங்கி வருகிறது.