Published : 03 Dec 2018 10:06 AM
Last Updated : 03 Dec 2018 10:06 AM

மத்திய அரசு நிறுவனத்துக்குள் நுழைந்த விவகாரம் பிரான்ஸ் பத்திரிகையாளர்களுக்கும் எங்களுக்கும் தொடர்பில்லை: தொலைக்காட்சி செய்தியாளர் விளக்கம்

மத்திய அரசு நிறுவனத்துக்குள் பிரான்ஸ் பத்திரிகையாளர்கள் நுழைந்து வீடியோ எடுத்த விவகாரத்துக்கும் எங்களுக்கும் தொடர்பில்லை என்று தொலைக்காட்சி செய்தியாளர் விளக்கம் அளித்துள்ளார்.

குமரி மாவட்டம் மணவாளக் குறிச்சியில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அரியவகை மணல் நிறுவனம் (ஐஆர்இஎல்) இயங்கி வருகிறது. கடந்த 26-ம் தேதி இந்த நிறுவனத்துக்குள் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பத்திரிகையாளர்கள் ஆர்தர் ரொனால்டு ரீனே, ஜீல்ஸ் டேமின் மற்றும் மணக்குடி பாதிரியார் ஹில்தாஸ் ஆகியோர் சென்றுள்ளனர். பின்னர், அவர்கள் தடை செய்யப்பட்ட பகுதிக்குள் நுழைந்து வீடியோ எடுத்ததாகக் கூறி வெளியேற்றப்பட்டனர். இதுகுறித்து மணவாளக்குறிச்சி காவல் நிலையத்தில் ஐஆர்இஎல் சார்பில் புகார் அளிக்கப்பட்டது.

இதன்பேரில், ஆர்தர் ரொனால்டு ரீனே, ஜீல்ஸ் டேமின் மற்றும் ஹில்தாஸ் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட பகுதிக்குள் அனுமதியின்றி வீடியோ எடுத்ததாகவும், பாஸ்போர்ட் விதிகளை மீறியதாகவும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதற்குள் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த இருவரும் அவர்கள் நாட்டுக்கு திரும்பிவிட்டனர். பாதிரியாரும் தேடப்பட்டு வருகிறார்.

மத்திய உளவுப்பிரிவு உள் ளிட்ட போலீஸார் இந்த வழக்கை தீவிரமாக விசாரித்து வருகின்றனர். பிரான்ஸ் பத்திரிகையாளர்களை அங்கு அழைத்துச் சென்ற தொலைக்காட்சி செய்தியாளர் கள் இருவரிடமும் போலீஸார் விசாரணை நடத்தியுள்ளனர்.

இந்நிலையில், பிரான்ஸ் நாட்ட வரை குமரி மாவட்ட கடற்கரை பகுதிகளுக்கு அழைத்துச்சென்ற செய்தியாளர் அனந்தகுமார் ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் நடந்த சம்பவம் பற்றி கூறியதாவது:

நான் சுற்றுச்சூழல் பிரச்சினைகள் குறித்து செய்தி வெளியிட்டு வருகிறேன். எனது செய்திகளை ‘யூ ட்யூப்’ மூலம் பார்த்துவிட்டு, பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த புலனாய்வு பத்திரிகையாளர்கள் ஆர்தர் ரொனால்டு ரீனே, ஜீல்ஸ் டேமின் இருவரும் என்னை தொடர்பு கொண்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெறும் கடல் அரிப்பு, தாது மணல் அள்ளுதல் உள்ளிட்ட சுற்றுச்சூழல் விதிமீறல் குறித்து விசாரிக்க உதவி கேட்டனர். அதன்பேரில், அவர்களை நானும் தென்காசியைச் சேர்ந்த மற்றொரு பத்திரிகையாளரும் அழைத்துச் சென்றோம்.

அவர்கள் கடற்கரைப் பகுதிகளில் நடைபெறும் விதிமீறல் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புகளை படம் எடுத்தனர். மீனவர்களைச் சந்தித்து பாதிப்புகளைக் கேட்டறிந் தனர். மறுநாள் நாங்கள் ஓட்டலில் தங்கியிருந்தபோது, சர்ச்சுக்கு செல்வதாகக் கூறிவிட்டுச் சென்றனர். பின்னர் அங்குள்ள பாதிரியார் ஒருவரை அழைத்துக் கொண்டு ஐஆர்இஎல் வளாகத்துக்குள் நுழைந்துள்ளனர். பின்னர் வெளியில் வந்து எங்களை தொடர்பு கொண்டபோதுதான் நாங்கள் அவர்களுடன் இணைந்தோம். அதன்பிறகே அவர்கள் ஐஆர்இஎல் வளாகத்துக்கு சென்ற விவகார மும், போலீஸார் தேடுவதும் தெரிய வந்தது. உடனே, பிரான்ஸ் பத்திரிகையாளர்கள் இருவரும் அவர்கள் நாட்டுக்கு அவசரம் அவசரமாக சென்று விட்டனர். நாங்கள் சென்னைக்கு வந்து வழக்கறிஞர்களின் ஆலோசனை யைக் கேட்டோம். போலீஸார் எங்களை தேடுவதை அறிந்து போலீஸ் கண்காணிப்பாளர் முன்பாக ஆஜராகி, விளக்கம் அளித் தோம்.

பிரான்ஸ் பத்திரிகையாளர்கள் இருவரும் புலனாய்வு செய்தி சேகரிப்பதாக சொன்னதால் உதவினோம். அவர்கள் ஐஆர்இஎல் நிறுவனத்துக்குள் நுழைந்தபோது நாங்கள் உடன் இல்லை. அது குறித்து எங்களுக்கு எதுவும் தெரி யாது. அதற்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்லை என்று விசாரணையில் தெரிவித்து விட்டோம்.

எங்கள் உதவியுடன் பாரீஸில் உள்ள பிரான்ஸ் பத்திரிகையாளர்களிடம் போலீஸார் வாட்ஸ்அப் வீடியோ கால் மூலம் பேசி விவரங் களை கேட்டறிந்தனர். இதற்கு மேல் போலீஸார் எங்களை தொந்தரவு செய்வது தேவையற்றது. இவ் வாறு அவர் கூறினார்.

பிரான்ஸ் பத்திரிகையாளர்கள் தங்கியிருந்த ஓட்டலில் அவர்க ளது உடைமைகளை விட்டுவிட்டு அவசரமாக திரும்பி விட்டனர். அவற்றை போலீஸார் கைப் பற்றி விசாரணை நடத்தி வருகின் றனர். வெளிநாட்டவர் தங்கினால் போலீஸாருக்கு தகவல் அளிக்க வேண்டும் என்பது விதி. இந்த விதியை மீறிய ஓட்டல் நிர்வாகியி டமும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். பிரான்ஸ் பத்திரிகையாளர்கள் சுற்றுலா விசா மூலம் இந்தியாவுக்குள் வந்து தொழில் நிமித்தமான பணிகளை மேற்கொண்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x