

தமிழகத்திலுள்ள நகராட்சி மற்றும் பேரூராட்சிகளைத் தொடர்ந்து சென்னை மாநகராட்சி வார்டு மறு வரையறை விவரங்களும் அரசித ழில் வெளியிடப்பட்டுள்ளன.
தமிழகத்தில் சென்னை மாநக ராட்சி உட்பட 12 மாநகராட்சிகள், 124 நகராட்சிகள், 528 பேரூராட் சிகள், 12 ஆயிரத்து 524 கிராம ஊராட்சிகள் உள்ளன. இந்த உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் கடந்த 2016-ம் ஆண்டு அக்டோபர் மாதத்துடன் முடிவடைய இருந்த நிலையில், அம்மாதம் உள்ளாட்சித் தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.
இந்த தேர்தலில் பழங்குடி யினருக்கு உரிய இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை என்று திமுக சார்பில் உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அதை விசாரித்த நீதிமன்றம், தேர்தல் அறிவிப்பை ரத்து செய்தது.
அதனைத் தொடர்ந்து, மாநில தேர்தல் ஆணையர் மாலிக் பெரோஸ்கான் தலைமையில் வார்டு மறுவரையறை ஆணை யத்தை அரசு அமைத்தது. அந்த ஆணையம் சார்பில் வார்டு மறு வரையறை பணிகள் நடைபெற்று வந்தன.
இப்பணிகள் நிறைவடைந்த பிறகே உள்ளாட்சித் தேர்தலை நடத்த முடியும். எனினும்உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடத்தும் செலவினங்களுக்காக ரூ.172 கோடியே 27 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள தாக 2018-19 நிதியாண்டு பட்ஜெட் டில் தமிழக அரசு தெரிவித் துள்ளது.
இதற்கிடையில் கடந்த 15-ம் தேதி தமிழகத்திலுள்ள 124 நகராட் சிகளுக்கான வார்டு மறுவரை யறை விவரங்கள் அரசிதழில் வெளி யிடப்பட்டன.
அதனைத் தொடர்ந்து 528 பேரூராட்சிகளுக்கான விவரங் களும் வெளியிடப்பட்டன. இந் நிலையில், தமிழகத்திலுள்ள மாநகராட்சிகளில் முதல் மாநக ராட்சியாக சென்னை மாநகராட்சி யின் வார்டு மறுவரையறை விவரங்கள் அரசிதழில் வெளியிடப் பட்டுள்ளது.
இது தொடர்பாக சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கூறிய தாவது:
சென்னை மாநகராட்சியில் 200 வார்டுகள் உள்ளன. அதில் மக்கள்தொகை அடிப்படையில் வார்டுகளின் எண்ணிக்கை குறை யாமல் மறு வரையறை செய்யப் பட்டுள்ளன. அதன் வரைவு விவரங்கள் கடந்த ஜனவரி மாதம் வெளியிடப்பட்டது.
அது தொடர்பாக அரசியல் கட்சிகள் மற்றும் பொது மக்க ளிடமிருந்து கருத்துகள் மற்றும் ஆட்சேபனைகள் பெறப்பட்டுள் ளன. அது குறித்து இறுதி முடிவு எடுப்பதற்காக நேரடி கருத்துக் கேட்பு கூட்டமும் நடத்தப் பட்டது.
அதில் வார்டு மறு வரையறை ஆணைய தலைவர் மாலிக் ஃபெரோஸ் கான், உறுப்பினர் செயலர் டி.ராஜசேகர், சென்னை மாநகராட்சி ஆணையர் தா.கார்த் திகேயன், ஆகியோர் பங்கேற்று கருத்துகளை கேட்டறிந்தனர்.
அதன் அடிப்படையில் தீர்வுகாணப்பட்டு தற்போது வார்டு மறுவரையறை விவரம் அரசிதழில் வெளியிடப்பட்டுள் ளது. அதில் ஒவ்வொரு வார்டு களுக்கான எல்லைகள் குறிப்பிடப் பட்டுள்ளன. அது தொடர்பான விவரங்களை தமிழிலும், ஆங்கி லத்திலும், சென்னை மாநகராட்சி இணையதளத்தில் பார்க்கலாம். மறுவரையறை செய்யப்பட்ட அனைத்து வார்டுகளின் வரை படங்களையும் அதில் பார்க்க முடியும்.
மாநகராட்சி சேவைகள்
வார்டு மறுவரையறையால் பொதுமக்கள் வேறு வார்டுக்குள் வந்தால், அதற்காக கவலைப்படத் தேவையில்லை. அதனால் பொது மக்களுக்கு எந்த நஷ்டமும் இல்லை. பொதுமக்கள் எந்த வார்டில் இருந்தாலும், மாநகராட்சி சேவைகள் அனைத்தும் ஒரே சீராக கிடைக்கும்.
இவ்வாறு அதிகாரிகள் தெரி வித்தனர்.