

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது கொளத்தூர் சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் நலத்திட்டப் பணிகளை ஆய்வு செய்தார்.
நேற்று காலை கொளத்தூர் தொகுதிக்கு வருகை தந்த ஸ்டாலின், தனது சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகத்தில் மக்க ளின் குறைகளைக் கேட்டறிந்தார். மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.
பந்தர் கார்டனில் உள்ள சென்னை மேல்நிலைப் பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பறையை தொடங்கி வைத்தார். இப்பள்ளிக்கு கூடுதல் வகுப்பறைகள் கட்ட திட்டமிடப் பட்டுள்ள இடத்தையும் பார்வை யிட்டு ஆலோசனைகள் வழங்கி னார். பின்னர் 400 மீட்டர் தடகள போட்டியில் மாநில அளவில் 2-வது இடம் பிடித்து தேசிய அளவிலான போட்டிக்குச் செல்லும் மாணவன் டி.ரூபகாந்தனுக்கு நிதி உதவி வழங்கினார்.
மார்க்கெட் தெருவில் உள்ள சென்னை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள நூலகத்துக்கு 1,500 புத்தகங்கள், 1,125 மாணவி களுக்கு நோட்டுப் புத்தகங்கள், ஜாமென்ட்ரி பாக்ஸ் உள்ளிட்ட கல்விக்கான உபகரணங்களை வழங்கினார்.
எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ. 82 லட்சம் செலவில் மேம்படுத்தப்படவுள்ள ஹரிதாஸ் தெரு தாமரை குளத்தை ஆய்வு செய்தார்.
பின்னர், லூர்து பெண்கள் மேல்நிலைப் பள்ளி, சென்னை உயர்நிலைப் பள்ளி, மார்க்கெட் தெரு சென்னை பெண்கள் மேல்நிலைப் பள்ளி, ஜி.கே.எம். காலனி சென்னை மேல்நிலைப் பள்ளி, மதுரை தெரு சென்னை நடுநிலைப் பள்ளி உள்ளிட்ட அரசுப் பள்ளிகளுக்கு நூற்றுக்கணக்கான பூச்செடிகளையும் ஸ்டாலின் வழங்கினார்.