பயிற்சி முடித்த ஐபிஎஸ் அதிகாரிகள் 6 பேர் ஏஎஸ்பிக்களாக நியமனம்

பயிற்சி முடித்த ஐபிஎஸ் அதிகாரிகள் 6 பேர் ஏஎஸ்பிக்களாக நியமனம்
Updated on
1 min read

ஐபிஎஸ் பயிற்சி முடித்த தமிழக கேடர் அதிகாரிகள் 6  பேர் உதவி கண்காணிப்பாளராக (ஏஎஸ்பி) நியமிக்கப்பட்டுள்ளனர்.

 தமிழக காவல்துறையில் உயர்ந்த பதவி ஐபிஎஸ் பதவி ஆகும். இந்திய குடிமைப்பணியின் கீழ் நடத்தப்படும் ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு தேர்வு செய்யப்படுகின்றனர். இதில் தேர்வு பெறுபவர்கள் அவர்களது மதிப்பெண் அடிப்படையில் சொந்த மாநிலமும், அடுத்தடுத்த மதிப்பெண் அடிப்படையில் பிற மாநிலங்களும் ஒதுக்கப்படும்.

அவ்வாறு வருபவர்கள் அந்தந்த மாநிலத்தில் ஐபிஎஸ் பயிற்சி முடித்தவர்களுக்கு முதலில் உதவி கண்காணிப்பாளர் பணியும், ஐஏஎஸ் தேர்வு முடித்தவர்களுக்கு துணை ஆட்சியர் பதவியும் வழங்கப்படும். அதன் பின்னரே கண்காணிப்பாளர் பணி வழங்கப்படும். அதன்படி, தற்போது ஐபிஎஸ் பயிற்சி முடித்து தமிழகத்துக்கு நியமிக்கப்பட்டுள்ள 6 பேருக்கு உதவி கண்காணிப்பாளராக பணி வழங்கப்பட்டுள்ளது.

 பயிற்சி பெற்றவர்களும் அளிக்கப்பட்ட பணியும்:

1. சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பிரிவு உதவி கண்காணிப்பாளராக கிருஷ்ணராஜ்,

2. திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பிரிவு உதவி கண்காணிப்பாளராக பவன்குமார்

3. திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் பிரிவு உதவி கண்காணிப்பாளராக ஹரிகிரண் பிரசாத்,

4. திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் பிரிவு உதவி கண்காணிப்பாளராக பிரவீன் உமேஷ்

5. விருதுநகர் பிரிவு உதவி கண்காணிப்பாளராக ஷிவபிரசாத்,

6. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பிரிவு உதவி கண்காணிப்பாளராக ஜவஹர் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

 இதற்கான உத்தரவை உள்துறை முதன்மை செயலர் நிரஞ்சன் மார்டி நேற்று வெளியிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in