

புதிய மாற்றங்களை கொண்டுவர ஒரே கருத்துடைய அரசியல் கட்சி கள் இணைந்து போராட வேண் டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல் லகண்ணு வலியுறுத்தியுள்ளார்.
பெரியார் நினைவுநாள் பொதுக் கூட்டம் சைதாப்பேட்டையில் நேற்று முன்தினம் நடந்தது. கூட்டத்தில் ‘ பெரியார் வெறும் சிலை அல்ல’, ‘கடவுள் மதம்’, ‘திராவிடர் இயக்கத்தை யாராலும் வீழ்த்த முடியாது’ என்பன உட்பட 6 நூல்கள் வெளியிடப்பட்டன. திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி. இந்நூல்களை வெளியிட, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு பெற்றுக் கொண்டார். பின்னர் நாடாளுமன்றத்தில் சிறந்த உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ள கனிமொழிக்கு திராவிடர் கழகம் சார்பில் கி.வீரமணி நினைவுப் பரிசு வழங்கி பாராட்டினார்.
இந்நிகழ்ச்சியில் கனிமொழி பேசும்போது, “பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு, இளை ஞர்களுக்கான வேலைவாய்ப்பு என பல்வேறு தேர்தல் வாக்குறுதி களை அளித்த பாஜக எதையும் செயல்படுத்தவில்லை. பணமதிப் பிழப்பு, ஜிஎஸ்டி போன்றவற்றால் தொழில்கள் நலிவடைந்துள்ளன. தொழிலாளர்கள் வேலை வாய்ப்பை இழந்துள்ளனர். மாநில உரிமைகள், மாநில மொழிகளை ஒடுக்கும் வகையில் மத்திய அரசு செயல்படுகிறது. எனவே, நமது உரிமைகளை காப்பாற்றிட பெரியார் வழியில் நடப்போம்.’’ என்றார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு பேசும்போது, “‘தமிழ் சமுதாயத் தில் நல்ல மாற்றம் கொண்டுவர கொள்கையைக் கொண்டு போராடியவர் பெரியார். ஜாதி, மதம் இல்லாத சமூகத்தை மக்களி டமிருந்து கொண்டு வர வேண்டும். இன்றைக்கு தமிழகத்துக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. இயற்கை வளங்களும், தொழில்களும் அழிந்து வருகின்றன. படித்து விட்டு வேலைக்காக ஏராளமான இளைஞர்கள் காத்திருக்கிறார்கள். கடவுளின் பெயரில் ஜாதி பெயரில் அரசியல் செய்கிறார்கள். புதிய மாற்றங்கள் கொண்டுவர ஒரே கருத்துடைய அரசியல் கட்சிகள் இணைந்து ஒற்றுமையுடன் போராட வேண்டும்.’’ என்றார்.
திராவிடர் கழகத் தலைவர் கி.வீர மணி பேசும்போது, “கருத்து சுதந் திரம், சமத்துவம், பெண்ணுரி மைக்காக போராடியவர் பெரியார். ஜாதி ஒழிக்க போராட்டம் நடத் திய தமிழகத்தில் தற்போது ஜாதியை காப்பாற்ற சிலர் முயற் சிக்கிறார்கள். இவையெல்லாம் மாற்ற மத்தியில் ஜனநாயக ஆட்சியும், தமிழகத்தில் திமுக ஆட்சியும் வரவேண்டும்’’ என்றார்.
கூட்டத்தில் திராவிடர் கழக துணைத் தலைவர் பூங்குன்றன், பொருளாளர் குமரேசன், வழக்கறிஞர் அருள்மொழி உட்பட பலர் பேசினர்.