Published : 28 Dec 2018 03:36 PM
Last Updated : 28 Dec 2018 03:36 PM

என்எல்சி விளை நிலங்களை கையகப்படுத்துவதைக் கண்டித்து ஜனவரி 6-ம் தேதி ஆர்ப்பாட்டம்: அமமுக அறிவிப்பு

என்எல்சி நிறுவனத்தைக் கண்டித்து, வரும் ஜனவரி 6 ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என, அமமுக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அமமுக தலைமைக்கழகம் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், "இயற்கையையும், மக்களின் வாழ்வாதாரத்தையும் அடியோடு நசுக்கும் எந்த ஒரு திட்டமும், மிக முக்கியமாக, மக்கள் விரும்பாத எந்த திட்டமும் இனி தமிழகத்திற்கு வேண்டாம் என்ற உரத்த குரலை அமமுக தொடர்ந்து எழுப்பி வருகின்றது.

இந்நிலையில் என்எல்சி நிறுவனம் தனது நிலக்கரி சுரங்கத்தை விரிவுபடுத்தும் நோக்கில் புவனகிரி தொகுதியில் 40 கிராமங்களுக்குட்பட்ட 12,000-க்கும் மேற்பட்ட விவசாய நிலங்களை மூன்றாவது சுரங்கப் பணிகளுக்காக கையகப்படுத்த முடிவெடுத்துள்ளதற்கு அந்த கிராமங்களைச் சார்ந்த விவசாய மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

என்எல்சி நிறுவனம் தனது 2-வது சுரங்கப் பணிகளுக்காக கையகப்படுத்திய விவசாய நிலங்களை இன்னும் முறையான வகையில் பயன்படுத்தாமலும், கையகப்படுத்தப்ட்ட நிலங்களுக்கு உரிய இழப்பீடோ, உத்திரவாதம் அளித்தபடி வேலைவாய்ப்போ வழங்காத நிலையில், மூன்றாவது சுரங்கத்திற்கான நிலம் கையகப்படுத்தும் இந்தச் செயலை மேற்கொள்ளும் என்எல்சி நிறுவனத்தைக் கண்டித்து, கடலூர் மேற்கு மாவட்ட கழகம் சார்பில், 06.01.2019 அன்று  மாலை 4 மணி அளவில், சேத்தியாத்தோப்பு பேருந்து நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.

இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கலந்துகொண்டு கண்டன உரை ஆற்ற உள்ளார்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x