Published : 28 Dec 2018 10:29 AM
Last Updated : 28 Dec 2018 10:29 AM

ரத்த தானம் நடைமுறைகளில் மாற்றம்: எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் புதிய உத்தரவு

சாத்தூர் சம்பவம் போன்று தவறு நடப்பதைத் தடுக்க, ரத்த தானம் பெறும்போது ரத்த வங்கிகளில் பின்பற்றப்படும் நடைமுறைகளில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப் பட்டுள்ளன.

அரசு ரத்த வங்கியில் ஒருவர் ரத்த தானம் அளிக்கும்போது அவரது பெயர், முகவரி, தொலைபேசி, செல்போன், மின்னஞ்சல் முகவரி, பாலினம், எடை, வயது, பிறந்த தேதி, கடைசியாக குருதி அளித்த தேதி, எவ்வளவு கால இடைவெளி யில் ரத்த தானம் அளிக்க விரும் புகிறார், ரத்த தானம் அளித்த தேதி, நேரம், ரத்த வகை, ரத்த சிவப்பணுக் கள் எண்ணிக்கை, இதயத்துடிப்பு எண்ணிக்கை போன்றவைகளை ரத்த வங்கி ஊழியர்கள் பதிவு செய் யும் நடைமுறை பின்பற்றப்பட்டு வருகின்றன.

அதோடு, ரத்தக் கொடையாளர் 18 முதல் 65 வயதுக்குள் இருக்க வேண்டும். குறைந்தது 45 கிலோ எடை இருக்க வேண்டும். எச்.பி.- 12.5 கிராமுக்குக் குறையாமல் இருக்க வேண்டும். நாடித் துடிப்பு 60-ல் இருந்து 100 வரை இருக்க வேண்டும். ரத்த அழுத்தம் சீராக இருக்க வேண்டும்.

மேலும், கொடையாளி சர்க்கரை நோய் உள்ளவரா, ஆஸ்துமா, இருதய நோயாளியா, எப்போதா வது காசநோய் தாக்கியுள்ளதா, கடந்த ஓராண்டுக்குள் டைபாய்டு, மலேரியா, மஞ்சள் காமாலை தாக்கியுள்ளதா, தற்போது ஏதும் தொடர்ந்து மருந்து உட்கொள் கிறாரா, கடந்த 24 மணி நேரத்தில் நோய்த் தடுப்பு மருந்து உட் கொண்டுள்ளாரா என்பதையும் கேட்டறிந்து படிவத்தில் பூர்த்தி செய்யப்பட வேண்டும்.

கொடையாளரிடம் தங்களின் ரத்தப் பரிசோதனை முடிவுகளை அறிய விரும்புகிறீர்களா என்ற கேள்வியும் கேட்கப்பட வேண்டும். கொடையாளர் விரும்புவதாகத் தெரிவித்தால் மட்டுமே பரி சோதனை முடிவை தெரிவிக்க வேண்டும். இல்லையெனில், ரத்தப் பரிசோதனை முடிவு எவ்வாறாக இருந்தாலும் அதை சம்பந்தப்பட்ட நபருக்குத் தெரியப்படுத்தக் கூடாது என்பது போன்ற விதிமுறைகளே இதுவரை பின்பற்றப்பட்டு வந்தன.

நடைமுறையில் முக்கிய மாறுதல்

ஆனால், சாத்தூரில் கர்ப் பிணிக்கு எச்.ஐ.வி. ரத்தம் ஏற்றிய சம்பவத்தையடுத்து, கொடையாள ரிடம் இருந்து அனைத்துத் தகவல் களை முழுமையாகப் பெறவும், ரத்தப் பரிசோதனையின் முடிவுகள் எவ்வாறாக இருந்தாலும் அதை உடனடியாக சம்பந்தப்பட்ட நபருக் குத் தெரியப்படுத்த வேண்டும் என தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்க திட்ட இயக்குநர் செந்தில்ராஜ் உத்தரவிட்டுள்ளார்.

வாரந்தோறும் கண்காணிப்பு

அதோடு, மாவட்ட திட்ட அலுவலர்கள் ரத்த வங்கிப் பதிவு களை வாரந்தோறும் கண்காணிக்க வேண்டும். அனைத்துப் பதிவு ஆவணங்கள், குளிர்சாதனப் பெட்டி கள் உள்ளிட்டவை முறையாக பராமரிக்கப்படுவதை மாதந் தோறும் மருத்துவ அதிகாரிகள் ஆய்வு நடத்த வேண்டும்.

கொடையாளருக்குப் பாதிப்பு இருந்தால் அதுகுறித்து சம்பந்தப் பட்ட மருத்துவப் பிரிவுக்கு உடனடி யாகத் தெரிவித்து சிகிச்சைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்பன போன்ற உத்தரவுகள் பிறப்பிக்கப் பட்டு உள்ளன.

இதன் நகல், மருத்துவப் பல்கலைக்கழகங்கள், மருத்துவப் பணி இணை இயக்குநர்கள், அரசு மருத்துவமனைக் கண் காணிப்பாளர்கள், எய்ட்ஸ் கட்டுப் பாட்டு சங்கப் பணியாளர்கள், ரத்த வங்கி அலுவலர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x