Published : 16 Dec 2018 08:26 AM
Last Updated : 16 Dec 2018 08:26 AM

ஸ்டெர்லைட் விவகாரத்தில் தமிழக அரசின் நிலையில் மாற்றமில்லை: அமைச்சர் கடம்பூர் ராஜூ தகவல்

`தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கக் கூடாது என்பதுதான் அரசின் நிலை' என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.

தூத்துக்குடி மாவட்டம் உடன் குடியில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் அனுமதி வழங்கியுள் ளது. ஸ்டெர்லைட் ஆலை தொடர் பான 22 ஆண்டுகால பிரச்சினை யில், மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து முற்றுப்புள்ளி வைத் தது அதிமுக அரசு. ஸ்டெர்லைட் ஆலையை திறக்கக்கூடாது என்பது தான் அரசின் நிலை. இதுபற்றி, முதல்வர் முடிவு செய்வார்' என்றார்.

தூத்துக்குடி ஆட்சியர் சந்தீப் நந்தூரி கூறியது: இது இறுதி தீர்ப் பில்லை. சட்ட ரீதியான வாய்ப்புகள் இன்னும் உள்ளன. ஆலை மீண்டும் திறக்கப்படும் என்று மக்கள் பயப் படத் தேவையில்லை. ஆலையை உடனடியாக திறக்கப்போகிறார் கள் என்பது தவறான தகவல். ஆலை யில் இருந்து ரசாயனங்களை அகற் றும் பணி தொடர்ந்து நடைபெறுகி றது என்றார் அவர்.

1,800 போலீஸார் குவிப்பு

தூத்துக்குடி எஸ்பி முரளி ராம்பா கூறியது: தூத்துக்குடி மாவட் டத்தில் 1,800 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பதற்ற மான பகுதிகள் கண்காணிப்பில் உள்ளன.

வஜ்ரா, வருண் போன்ற கலவர தடுப்பு வாகனங்கள், ஆம்புலன்ஸ்கள், தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன.

வன்முறையைத் தூண்டும் வகையில் செயல்படுவோர் குறித்து, மாவட்ட காவல் அலுவல கத்துக்கு 0461 234 0650, 95141 44100 ஆகிய எண்களில் தெரிவிக்க வேண்டும் என்றார்.

ஸ்டெர்லைட் வரவேற்பு

தூத்துக்குடி ஸ்டெர்லைட் தலைமை நிர்வாக அதிகாரி பி.ராம் நாத் கூறும்போது, 'தேசிய பசுமை தீர்ப்பாயம் பிறப்பித்துள்ள ஆணையை வரவேற்கிறோம். ஆலை மூடப்பட்டதால் பாதிக்கப் பட்ட அனைவருக்கும் வாழ்வாதா ரம் கிடைக்கும்.

தீர்ப்பாயம் வழங்கியுள்ள வழிகாட்டல்களின்படி ஆலை யின் செயல்பாடுகளை மீண்டும் தொடங்க நடவடிக்கைகளை மேற்கொள்வோம். இப்பகுதி நலனுக்காக பாடுபடுவோம். மக்க ளோடு ஒன்றிணைந்து வளர உறுதி கொண்டிருக்கிறோம்' என்றார்.

ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு இயக்கத்தினர், பேராசிரியை பாத்திமா பாபு தலைமையில் நேற்று மாலை, எஸ்.பி. அலுவல கம் வந்தனர். தங்கள் இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டத்துக்கு அனுமதி கேட்டு அவர்கள் மனு அளித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x