

பள்ளிகளுக்கு அரையாண்டுத் தேர்வு விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில், திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு சுற்றுலாப் பயணிகள் ஏராளமானோர் வருகை தந்துள்ளனர். மேலும், கிறிஸ்துமஸ் பண்டிகையைக் கொண்டாடவும் பலரும் குவிந்துள்ளதால் சுற்றுலாத் தலங்களில் கூட்டம் அதிளவில் காணப்படுகிறது.
லேசான சாரல் மழையுடன் மூடு பனி நிலவுவதால் வாகனங் கள் சாலையில் செல்வதில் சிரமம் ஏற்படுகின்றன. எதிரே வரும் வாகனங்கள் சரியாகத் தெரியாத தால் பகலிலேயே விளக்குகளை ஒளிரவிட்டு வாகனங்கள் மெது வாகச் செல்கின்றன. மூடு பனி காரணமாக இயற்கைக் காட்சி களை ரசிக்க முடியாத நிலை சுற்றுலாப் பயணிகளுக்கு ஏற்பட் டுள்ளது. பகலில் போதிய வெளிச் சம் இல்லாத நிலையை காண முடிகிறது.
இரவில் நிலவும் கடுங் குளிரையும் பொருட்படுத்தாது சுற்றுலாப் பயணிகள் ஏராள மானோர் விடுதிகளில் தங்கி, கிறிஸ்துமஸ் பண்டிகையைக் கொண்டாட உள்ளனர்.
கொடைக்கானலில் நேற்று காற்றின் ஈரப்பதம் 80 சதவீதமாக இருந்தது. ஆறு கிலோ மீட்டர் வேகத்தில் மிதமான குளிர்காற்று வீசியது. அதிகபட்ச வெப்பநிலை 14 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 9 டிகிரி செல்சியஸாகவும் இருந்தது.