

ஜனவரியில் நடக்க உள்ள உலக முதலீட்டாளர் மாநாட்டில் கூடுதல் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் தமிழகத்தில் ரூ.14 ஆயிரம் கோடி முதலீடு செய்யும் 16 நிறுவனங் களுக்கு முதல்வர் பழனிசாமி தலைமையிலான அமைச்ச ரவைக் கூட்டத்தில் அனுமதி அளிக் கப்பட்டுள்ளது. மேலும், ஜனவரி மாதம் சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஆற்ற உள்ள உரைக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
ரூ.2,42,160 கோடி முதலீடு
தமிழகத்தில் கடந்த 2015-ம் ஆண்டு செப்டம்பர் 9, 10 தேதி களில், முதலாவது உலக முதலீட் டாளர்கள் மாநாடு நடந்தது. இதில் ரூ.2,42,160 கோடி முதலீடு கள் ஈர்க்கப்பட்டன. 98 நிறுவனங் களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இதன் தொடர்ச்சியாக கடந்த 3 ஆண்டு களில் 60-க்கும் மேற்பட்ட நிறுவனங் கள் ரூ.70 ஆயிரம் கோடி அளவுக்கு முதலீடுகள் செய்தன.
இந்நிலையில், 2-வது உலக முதலீட்டாளர்கள் மாநாடு வரும் 2019-ம் ஆண்டு ஜனவரி 23, 24 தேதிகளில் சென்னையில் நடக்கிறது. இதற்காக ரூ.75 கோடி ஒதுக்கப்பட்டதுடன், முன்னேற்பாடு களை தமிழக தொழில்துறை செய்து வருகிறது.
சிறப்பு அதிகாரி நியமனம்
இதுதொடர்பான பணிகளை ஒருங்கிணைக்க தொழில் துறையின் கீழ் சிறப்பு அதிகாரியாக அருண் ராய் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
முதலீட்டாளர்களுக்கு தேவை யான வசதிகளை செய்து தருதல், முதலீட்டாளர்கள் வந்து பார்வை யிடுவதற்கேற்ப விளக்க நிகழ்ச்சி களுக்கான ஏற்பாடுகளை செய்தல் போன்ற பணிகளை அவர் ஒருங் கிணைப்பார்.
தமிழகம் முழுவதும் சிறப்பு பொருளாதார மண்டலங்களில் காலியாக உள்ள இடங்கள் குறித்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. முதலீட்டு திட்டங்களுக்கு உடனடி அனுமதி வழங்குதல் மற்றும் முதலீட்டாளர்களுக்கு வேறு என்னென்ன வசதிகள், சலுகைகள் வழங்கலாம் என்பது குறித்தும் தொடர் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.
மேலும், தொழில், மீன்வளம், போக்குவரத்து, சுகாதாரம், தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட துறை களைச் சேர்ந்த அமைச்சர்கள், பல்வேறு நாடுகளுக்குச் சென்று முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
இதற்கிடையில், முதலீட்டாளர் களை ஈர்க்கும் விதமாக குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் தொழில் தொடங்க ஒப்புதல் அளிப்பது, பல் வேறு நிறுவனங்களின் விரிவாக் கம், புதிய முதலீடுகளுக்கு ஒப்புதல் அளிப்பது ஆகிய நடவடிக்கை களில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளது. மேலும், ஒரு குறிப்பிட்ட தொகைக்கு மேல், முதலீடுகள் பெறப்படும் பட்சத்தில் சலுகைகள், அனுமதி அளிக்க வேண்டுமானால் அமைச்ச ரவை ஒப்புதல் பெற வேண்டியது அவசியம்.
இதற்கிடையில், அடுத்த ஜனவரி மாதம் நடக்கவுள்ள சட்டப்பேரவை முதல் கூட்டத்தில், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரை நிகழ்த்த அனுமதி அளிப்பதற்கான அமைச்சரவைக் கூட்டம் முதல்வர் பழனிசாமி தலைமையில் நேற்று நடந்தது.
இதில் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை முன்னிட்டு தொழில் துறை சார்பில், இறுதி செய்யப் பட்ட 16 நிறுவனங்களின் முதலீடு களுக்கு அமைச்சரவை அனுமதி அளித்தது. இந்த 16 நிறுவனங்களில் தொழிற்சாலை விரிவாக்கம் மற்றும் புதிய தொழில் நிறுவன முதலீடு களும் அடங்கும்.
30,000 பேருக்கு வேலை
குறிப்பாக, ரூ.14 ஆயிரம் கோடி முதலீடுகள் மற்றும் 30 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக் கும். இவற்றுக்கான ஒப்பந்தம் முதலீட்டாளர்கள் மாநாட்டில் மேற் கொள்ளப்படும். இதன்மூலம், அதிக அளவிலான தொழில் நிறுவனங்கள் அடுத்த மாதம் நடக்க உள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலீ டுகளை அளிக்கும் என்றும் தொழில் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
இவை தவிர, ஸ்டெர்லைட் விவகாரம், மேகேதாட்டு அணை பிரச்சினை தொடர்பாக அமைச் சர்களுடன் முதல்வர் ஆலோசனை நடத்தியதாகவும் கூறப்படுகிறது.