

திருவள்ளூர் அருகே முகநூல் காதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்த தாய் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் மகள் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருவள்ளூர் அருகே உள்ள காக்களூர்-ஆஞ்சநேயபுரத்தைச் சேர்ந்த திருமுருகநாதன் - பானு மதி(50) தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனர். இதில், இளைய மகளான தேவிபிரியா (19), பட்டாபிராம் பகுதியில் உள்ள கல்லூரி ஒன்றில் பி.காம் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த சில மாதங்க ளுக்கு முன்பு, தேவிபிரியாவுக்கும் கும்பகோணத்தைச் சேர்ந்த விவேக் என்பவருக்கும் இடையே முகநூல் மூலம் நட்பு ஏற்பட்டு காதலாக மாறி உள்ளது.
இதனையடுத்து, கடந்த சில நாட்களுக்கு முன்பு விவேக்கினை தொலைபேசியில் தொடர்புக் கொண்ட தேவிபிரியா, இருவரும் திருமணம் செய்துக் கொள்ள ஏது வாக தன்னை வந்து, அழைத்துச் செல்லுமாறு தெரிவித்ததாக தெரிகி றது. இதற்கு பதிலளித்த விவேக், 'மைசூரில் தனியார் ஜவுளிக்கடை யில் பணிபுரியும் தன்னால் காக்க ளூருக்கு வர இயலாது. ஆகவே, எனது நண்பர்களை அனுப்புகி றேன். அவர்களுடன் வந்துவிடு' என தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, நேற்று முன் தினம் மாலை, விவேக்கின் நண்பர் களான கும்பகோணம் விக்னேஷ் (18), திருவிடைமருதூர் சதீஷ்(18) ஆகிய இருவரும் காக்களூர் பகுதிக்கு வந்து, தேவிபிரியாவை சந்தித்துள்ளனர். அப்போது, அவர், ’நாளை (நேற்று) மதியம் என் அம்மா வீட்டில் தூங்கிக் கொண்டிருப்பார். அப்போது, வீட்டுக்கு வாருங்கள். நான் உங்களோடு வருகிறேன்’ என தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, நேற்று விக் னேஷ் மற்றும் சதீஷ் ஆகிய இருவ ரும் தேவிபிரியா வீட்டுக்குச் சென் றனர். அவர்களுடன் கிளம்புவதற்கு தேவி பிரியா தயாராகி கொண்டி ருந்தபோது, உறங்கிக் கொண்டி ருந்த பானுமதி விழித்தெழுந்தார்.
அவர், முகநூல் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, தேவி பிரியாவை வீட்டை விட்டு செல்ல விடாமல் தடுத்துள்ளார். இதனால், கோபமடைந்த விக்னேஷும், சதீஷும் பானுமதியை கீழே தள்ளி விட்டுள்ளனர். தொடர்ந்து. தேவி பிரியா, சமையல் அறையில் இருந்த காய்கறி நறுக்கும் கத்தியை எடுத்து பானுமதியின் வயிறு, மார்பு உள் ளிட்ட இடங்களில் சரமாரியாக குத்தி யுள்ளார்.
இதில், படுகாயமடைந்த பானு மதி நேற்று மாலை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை யில் சிகிச்சை பெற்று, மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டார். அங்கு செல்லும் வழியிலேயே பானுமதி உயிரிழந்தார்.
இதுகுறித்து, வழக்குப் பதிவு செய்துள்ள திருவள்ளூர் தாலுக்கா போலீஸார், தேவிபிரியா, விக்னேஷ், சதீஷ் ஆகிய 3 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.