புயல் சேத மதிப்புகளை முழுமையாக ஆய்வு செய்து நிவாரணம் வழங்க வேண்டும்: முத்தரசன்

புயல் சேத மதிப்புகளை முழுமையாக ஆய்வு செய்து நிவாரணம் வழங்க வேண்டும்: முத்தரசன்
Updated on
1 min read

புயல் சேத பாதிப்புகளை முழுமையாக கணக்கெடுக்க வேண்டும். கஜா புயல் பாதிப்புகளையும், பயனாளிகளின் எண்ணிக்கையினையும் அரசு குறைத்து கணக்கீடு செய்திட முயல்வது கண்டனத்திற்குரியது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் இரா.முத்தரசன் இன்று வெளியிட்டுள்ள  அறிக்கை:

கஜா புயலால் ஏற்பட்டுள்ள கடும் பாதிப்பில் இருந்து மக்களை மீட்கவும், நம்பிக்கையூட்டவும்அரசு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு, அவநம்பிக்கையிலிருந்துமீள்வதற்கான உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்துகின்றோம்.

நீண்ட காலம் பலன் தரும் மரங்களான தென்னை, மா, பலா, முந்திரி, எலுமிச்சை, நெல்லிபோன்றவைகளை கணக்கிடுவதில் ஏராளமான குளறுபடிகள் உள்ளன என விவசாயிகள்வேதனைப்படுகின்றனர்.

கிராம நிர்வாக அதிகாரிகள் பராமரிக்கும் அடங்கலை மட்டுமே பயன்படுத்தி  நிவாரணம்வழங்க இயலாது என்ற எதார்த்த உண்மையை அரசு புரிந்து கொண்டு, அதிகாரிகளுக்கு உரியவழிகாட்டுதலை வழங்கிட வேண்டும்.

தென்னை, மா, பலா, முந்திரி, எலுமிச்சை, கொய்யா, செடி முருங்கை போன்றவைகளைஏக்கரின் அடிப்படையில் கணக்கு எடுக்காமல்,  மரங்களின் எண்ணிக்கை அடிப்படையில்நிவாரணம் வழங்குவது விவசாயிகளுக்கு பயன் அளிக்கும் என்ற விவசாயிகளின் கருத்திற்குஅரசு மதிப்பளித்திட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம்.

பாதிப்பின் அளவையும் பயனாளிகளின் எண்ணிக்கையினையும் வெகுவாக குறைக்கமுயல்வது, வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போன்ற செயலாகும்.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களை பேரிடர் மாவட்டங்களாக அறிவித்து, பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும், பாகுபாடு இன்றி நிவாரணங்களை வழங்கிட அரசுமுன் வரவேண்டுகிறோம்.

கஜா புயல் பாதிப்பு அனைவருக்கும் ஏற்பட்டுள்ள நிலையில் சிறு, குறு விவசாயிகளுக்குமட்டுமே நிவாரணம் என்பது ஏற்க இயலாது.

சிறு, குறு, சிறிய, பெரிய விவசாயிகள் என பாகுபாடு இன்றி, அவரவர் பாதிப்பிற்கு கேற்றவகையில் நிவாரணம் வழங்கிட வலியுறுத்தி கேட்டுக் கொள்கின்றோம்.”

இவ்வாறு முத்தரசன் தெரிவித்துள்ளார்.    

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in