

சாத்தூரில் கர்ப்பிணி பெண் ணுக்கு எச்ஐவி தொற்று உள்ள ரத்தம் செலுத்தப்பட்டது தொடர்பாக, வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தப்படும் என்று மாநில மனித உரிமைகள் ஆணைய உறுப்பினர் நீதிபதி துரைஜெயச்சந்திரன் கூறினார்.
பாளையங்கோட்டை மத்திய சிறையில் ஆய்வு மேற்கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
சிறை அதிகாரிகளிடம் விசாரணை
பாளையங்கோட்டை மத்திய சிறையில் சிறைவாசிகள் ஜாதிரீதி யாக பிரிக்கப்பட்டு அடைக்கப் பட்டுள்ளதாக வந்த புகாரை அடுத்து ஆய்வு செய்து விசாரணை நடத்தப்பட்டது. அதிகாரிகளிடம் நடத்திய விசாரணையில், பாது காப்பு முன்னெச்சரிக்கை நடவடிக் கைக்காகவே, இதுபோன்று பிரித்து வைத்திருப்பதாக கூறினர். விரைவில் இந்த முறை மாற்றப்ப டும் எனவும் தெரிவித்தனர்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் கர்ப்பிணி பெண் ணுக்கு எச்ஐவி தொற்று உள்ள ரத்தம் செலுத்தப்பட்டது தொடர்பாக, மாநில மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து வழக்கை விசாரிக்கும். இந்த விவகாரம் தொடர்பான அறிக்கையை மருத்துவ பிரதிநிதிகளிடம் இருந்து பெற்று, பாதிக்கப்பட்டவருக்கு உரிய நிவாரணம் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு நீதிபதி துரை ஜெயச்சந்திரன் கூறினார்.