Published : 17 Dec 2018 08:47 AM
Last Updated : 17 Dec 2018 08:47 AM

மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் ‘மெகா’ கூட்டணி அமைப்போம்: அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தகவல்

மக்களவைத் தேர்தல் அறிவிக்கப் பட்டவுடன், அதிமுக மெகா கூட்டணி அமைக்கும் என்று பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தெரிவித்தார்.

கோவையில் செய்தியாளர்களி டம் நேற்று அவர் கூறியதாவது: ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க எவ்வித முகாந்திரமும், சாத்தியக்கூறும் கிடையாது.

புயலால் வீடிழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்குவதில் எவ்வித முறைகேடும் நடைபெறவில்லை. அரசின் மீது ஊழல் குற்றம் சுமத்து வதை சிலர் பொழுதுபோக்காக கொண்டுள்ளனர். எம்ஜிஆர், ஜெய லலிதா தலைமையை ஏற்று செயல் படும் அதிமுகவினர், வேறு கட்சிக்கு போக மாட்டார்கள். தினகரன் அணியில் இருப்பவர் கள் நொந்துபோய் உள்ளனர். இரட்டை இலை எங்கு உள்ளதோ, அதுதான் உண்மையான அதிமுக. பிரிந்து சென்ற பலர் மீண்டும் அதி முகவுக்கு வர விரும்புகிறார் கள். கரூர் செந்தில்பாலாஜி தனிப் பட்ட காரணங்களுக்காக திமுக வுக்கு சென்றுள்ளார். ராஜீவ் கொலை வழக்கில் கைது செய்யப் பட்ட 7 பேரின் விடுதலை தொடர் பாக, முதல்வர் பழனிசாமி, ஆளுந ருக்கு அழுத்தம் கொடுத்து வருகி றார். விரைவில் அந்த 7 பேரும் விடுதலையாவார்கள்.

திமுகவுக்கு தேர்தல் பயம் வந்து விட்டது. இதனால்தான் தேர்தல் குறித்த அறிவிப்பு வரும் முன்னரே கூட்டணி அமைக்கிறார்கள். மக்கள வைத் தேர்தல் அறிவிக்கப்பட்ட வுடன், அதிமுக மெகா கூட்டணி அமைக்கும். உரிய தேர்தல் வியூகத் துடன், வெற்றிக் கூட்டணி அமைப் பார் முதல்வர் பழனிசாமி என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x