தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் வந்தாலும் எல்ஐசி-யே தொடர்ந்து முன்னிலை: மண்டல மேலாளர் பெருமிதம்

தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் வந்தாலும் எல்ஐசி-யே தொடர்ந்து முன்னிலை: மண்டல மேலாளர் பெருமிதம்
Updated on
1 min read

ஆயுள் காப்பீட்டுத் துறையில் பல தனியார் நிறுவனங்கள் வந்த போதிலும் எல்ஐசி தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது என்று அந்நிறுவன மண்டல மேலாளர் டி.சித்தார்த்தன் கூறினார்.

எல்ஐசி-யின் 58-வது ஆண்டு காப்பீட்டு வார விழா திங்கள் கிழமை கொண்டாடப்பட்டது. அப்போது மண்டல மேலாளர் டி.சித்தார்த்தன் பேசியதாவது:

எல்ஐசி 1956-ம் ஆண்டில் தொடங்கப்பட்டு தொடர்ந்து மக்களின் நன்மதிப்பை பெற்றுள் ளது. இதற்கு ஏஜென்டுகள், வளர்ச்சி அதிகாரிகள், அலுவலர் கள் உள்ளிட்டோரின் விடா முயற்சியே காரணம். இத்துறை யில் பல தனியார் நிறுவனங்கள் நுழைந்த போதிலும் 75.42 சதவீத பங்குடன் எல்ஐசி தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. எல்ஐசி தெற்கு மண்டலம் தமிழ் நாடு, கேரளம், புதுச்சேரி, லட்சத் தீவுகள் ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது.

கடந்த ஆண்டில் எல்ஐசி தெற்கு மண்டலத்தின் பிரீமியம் வருவாய் ரூ.3,381 கோடியாகும். இது நமது இலக்கை (ரூ.3,350 கோடி) விட அதிகமாகும். வளர்ச்சி விகிதம் 14 சதவீதமாக உள் ளது. அதேபோல நடப்பு ஆண் டில் ரூ.1,100 கோடி அள வுக்கு வைப்புத் தொகை திரட்டப்பட்டுள்ளது.

‘பிரதான் மந்திரி ஜன் தன்’ என்ற புதிய திட்டம் மூலம் நாட்டில் உள்ள அனைத்து குடும்பங்க ளுக்கும் வங்கிக் கணக்கு தொடங் கும் திட்டத்தை பிரதமர் அறி வித்துள்ளார். அனைத்து வங்கிக் கணக்குதாரர்களுக்கும் எல்ஐசி சார்பில் காப்பீடு அளிக்கப்படும்.

தெற்கு மண்டலத்தில் நடப்பு ஆண்டில் பாலிசி முதிர்வடைந்த 6.5 லட்சம் பாலிசிதாரர்களுக்கு மொத்தம் ரூ.2,250 கோடியும், பாலிசி காலத்தில் இறந்த 24,310 பாலிசிதாரர்களுக்கு ரூ.231 கோடியும் பணப் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டில் ‘வரிஷ்டா பென்சன் பீமா யோஜனா’, ‘ஜீவன் ரக்ஷா’, ‘ஜீவன் ஷாகுன்’ ஆகிய திட்டங்களை எல்ஐசி அறிமுகப்படுத்தியுள்ளது.

இவ்வாறு மண்டல மேலாளர் டி.சித்தார்த்தன் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in