Last Updated : 13 Dec, 2018 12:33 PM

 

Published : 13 Dec 2018 12:33 PM
Last Updated : 13 Dec 2018 12:33 PM

மேகேதாட்டு விவகாரம்- புதுச்சேரியில் நாளை சிறப்பு சட்டப்பேரவைக் கூட்டம்

மேகேதாட்டு அணை விவகாரம் தொடர்பாக சிறப்பு தீர்மானம் நிறைவேற்ற புதுச்சேரியில் நாளை சிறப்பு சட்டப்பேரவை கூட்டம் நடைபெற உள்ளது.

மேகேதாட்டுவில் அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு சிறப்பு சட்டப்பேரவையை கூட்டி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இந்நிலையில் மேகேதாட்டுவில் அணை கட்டப்பட்டால் தமிழகம் மட்டுமல்லாமல் காவிரி நீரை நம்பியுள்ள புதுச்சேரியின் காரைக்கால் மாவட்டமும் பாதிக்கப்படும்.

மேகேதாட்டுவில் அணைகட்டுவதற்கான ஆய்வு பணிய மேற்கொள்ள மத்திய அரசு அளித்த முதற்கட்ட அனுமதியை ரத்து செய்ய வலியுறுத்தி புதுச்சேரி சட்டப்பேரவையிலும் தீர்மானம் நிறைவேற்ற சிறப்பு சட்டப்பேரவை கூட்டத்தை கூட்ட வலியுறத்தி அதிமுக மற்றும் திமுக தரப்பில் சபாநாயகரிடம் மனு அளித்திருந்தனர்.

இந்நிலையில் சிறப்பு சட்டப்பேரவை கூட்டத் தொடர் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு கூட உள்ளதாக சட்டப்பேரவை செயலர் வின்சென்ட் ராயர் அறிவித்திருந்தார். நாளைய தினம் கூட உள்ள சட்டப்பேரவை கூட்டத்தில் மேகேதாட்டு  அணை விவகாரம் தொடர்பாக ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பபடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் மத்திய அரசு நியமனம் செய்த மூன்று நியமன சட்டப்பேரவை உறுப்பினர்களின் நியமனம் செல்லும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய நிலையில் நாளைய பேரவை கூட்டத்தில் பாஜகவை சேர்ந்த மூன்று  உறுப்பினர்களுக்கு பேரவையில் இருக்கை ஒதுக்கப்பட்டுள்ளது.

அதே போன்று சொத்து குவிப்பு வழக்கில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அசோக் ஆனந்தனுக்கு நீதிமன்றம் வழங்கிய தண்டனையை தொடர்ந்து அவரது எம்எல்ஏ பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் அவரது இருக்கை அகற்றப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x