

இந்தியாவில் கிராம மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த பொருளாதார நிபுணர்கள் ஆய்வு செய்ய வேண்டும் என தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வலியுறுத்தியுள்ளார்
வேலூர் விஐடி பல்கலைக் கழகத்தில் இந்திய பொருளாதார கூட்டமைப்பு சார்பில் 101-வது தேசிய மாநாடு நேற்று தொடங்கியது. 3 நாட்கள் நடை பெறவுள்ள மாநாட்டுக்கு விஐடி வேந்தரும், இந்திய பொருளாதார சங்கத்தின் மாநாட்டுத் தலை வருமான ஜி.விசுவநாதன் தலைமை தாங்கினார். முன்னதாக, விஐடி பல்கலைக் கழக துணைத் தலைவர் சேகர் விசுவநாதன் வரவேற்றார்.
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சிறப்பு அழைப் பாளராக பங்கேற்று பொருளா தாரத்தில் சிறந்து விளங்கியவர் களுக்கு விருதுகளை வழங்கி, மாநாட்டு மலரை வெளியிட்டு பேசும்போது, ‘‘முதல் மற்றும் 2-ம் நூற்றாண்டுகளில் இந்தியா பொருளாதாரத்தில் வளர்ந்த நாடாக விளங்கியது. அப்போது, பல நாடுகளுடன் இந்தியா வர்த்தகம் நடத்தியது. ஆங்கிலேயர்கள் வந்த பிறகு அவர்கள் நாட்டின் உற்பத்தி பொருட்கள் இந்தியாவில் சந்தைப் படுத்தப்பட்டன. இதனால், இந்தியாவின் தொழில் வளர்ச்சி முடங்கியது.
இது தவிர, அப்போது பணப் பரிமாற்றத்துக்கு பதிலாக பண்ட பரிமாற்றங்களே அதிகமாக இருந்தன. இது கடைக்கோடி மக்களை சென்றடையவில்லை. நாட்டின் வளர்ச்சிக்கு என்னென்ன செய்ய வேண்டும் என்பது பற்றி பொருளாதார நிபுணர்கள் ஆலோசிக்க வேண்டும். அடித்தட்டு மக்களையும் சந்தித்து அவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவது குறித்து ஆய்வு செய்ய வேண்டும்.
சுதந்திரம் அடைந்ததும், நாட்டில் தொழில் வளர்ச்சி மற்றும் வேளாண்மை புரட்சி ஏற்பட்டது. பொதுத்துறை நிறுவனங்களும் வளர்ச்சியடைந்தன.
உலகில் தாராளமயமாக்கல் கொள்கை வந்ததும் இந்தியா தகவல் தொழில்நுட்பத் துறையில் அபரிமிதமான வளர்ச்சியை கண்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி கொண்டு வந்துள்ள ‘மேக் இன் இந்தியா’ திட்டம் வெற்றியடைந்துள்ளது எனக் கூறலாம்.
அதேபோல், உள்நாட்டு உற்பத் தியும் அதிகரித்துள்ளது. இந்த மாநாட்டில் வாழ்க்கை தரம் உயர்வு, பொருளாதார கொள்கையில் மாற்றம், வேளாண்மை துறையில் வளர்ச்சி, வேலைவாய்ப்பு, திறன் வளர்ப்பு உட்பட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக் கப்பட உள்ளது. பொருளாதார நிபுணர்கள் நாட்டின் வளர்ச்சிக்கு துணையாக இருந்தால் நாடு முன்னேற்ற பாதையில் செல்லும்" என்றார்.