Published : 04 Dec 2018 09:56 AM
Last Updated : 04 Dec 2018 09:56 AM

கருணாநிதி சிலை திறப்பு விழாவையொட்டி ராயப்பேட்டையில் 16-ம் தேதி திமுக பொதுக் கூட்டம்: சோனியா, சந்திரபாபு நாயுடு பங்கேற்பு

மறைந்த திமுக தலைவர் கரு ணாநிதியின் சிலை, சென்னை அண்ணா அறிவாலயத்தில் வரும் 16-ம் தேதி திறக்கப்பட உள்ளது. இதைத் தொடர்ந்து ராயப்பேட்டை ஒய்எம்சிஏ திடலில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் சோனியா காந்தி, சந்திரபாபு நாயுடு, பினராயி விஜயன் உள்ளிட்டோர் பங்கேற்க இருப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக சென்னையில் அவர் நேற்று கூறியதாவது:

மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் முழு உருவ வெண்கலச் சிலை, அண்ணா அறிவாலய வளாகத்தில் வரும் 16-ம் தேதி திறக்கப்பட உள்ளது. இதற்கான பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. அண்ணா அறிவாலய வளாகத்தில் எனது தலைமையிலும், திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் முன்னி லையிலும் சிலை திறப்பு விழா நடக்கவுள்ளது.

கருணாநிதி, அண்ணா சிலை களை காங்கிரஸ் முன்னாள் தலை வர் சோனியா காந்தி திறந்து வைக்கிறார். ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, கேரள முதல்வர் பினராயி விஜயன், புதுச்சேரி முதல்வர் வி.நாராயணசாமி உள் ளிட்டோர் விழாவில் பங்கேற்க வுள்ளனர்.

சிலை திறப்பு விழா முடிந்ததும் அதன் தொடர்ச்சியாக சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் பொதுக்கூட்டம் நடக்கிறது. அதில் தலைவர்கள் அனைவரும் பங்கேற்கின்றனர். அதற்கான ஏற்பாடுகளும் தீவிர மாக நடந்து வருகின்றன.

சென்னையில் ஆளுநர் மாளிகை முற்றுகை போராட் டத்தின்போது செய்தியாளர் ஒருவர் தாக்கப்பட்டதாக செய்திகள் பார்த்தேன். ஆனால், சில ஆங்கில ஊடகங்கள் திட்டமிட்டு திமுக மீது வீண்பழி சுமத்தி வருகின்றன. செய்தியாளரை தாக்கியதாக ஒருவரை போலீஸார் கைது செய்துள்ளனர். இது தொடர்பாக திமுகவினர் யார் மீதும் வழக்கு பதிவு செய்யப்படவில்லை.

இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x