ஆயுள் தண்டனை கைதி இல்லற வாழ்வில் ஈடுபடுவதற்காக பரோல் வழங்கி உத்தரவு

ஆயுள் தண்டனை கைதி இல்லற வாழ்வில் ஈடுபடுவதற்காக பரோல் வழங்கி உத்தரவு
Updated on
1 min read

கொலை வழக்கில் சிறையில் உள்ள ஆயுள் தண்டனை கைதி இல்லற வாழ்வில் ஈடுபடுவ தற்காக 2 வாரங்களுக்கு பரோல் வழங்கி சென்னை உயர் நீதிமன் றம் உத்தரவிட்டுள்ளது.

கொலை வழக்கில் கைதான திருநெல்வேலியைச் சேர்ந்த 28 வயதான நபர் தற்போது ஆயுள் தண்டனை கைதியாக கடலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் தனது கணவருடன் இல்லற வாழ்வில் ஈடுபட தனக்கு உரிமை உள்ளதால் தனது கணவருக்கு பரோல் வழங்க வேண்டுமெனக் கோரி அவரது இளம் வயது மனைவி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சி.டி.செல்வம், எஸ்.ராம திலகம் ஆகியோர் அடங்கிய அமர்வு, ‘மனிதன் என்பவன் ஒரு சமூக விலங்கு. மனிதனுக்கும் குடும்பம் தேவை. தன்னுடைய உணர்வுகளையும், உணர்ச்சிகளை யும் வெளிப்படுத்த வாழ்க்கை துணை தேவை. இல்லற வாழ்வு என்பது ஒவ்வொருவரின் உரிமை. ஆயுள் தண்டனை கைதி என்பதற் காக அந்த உரிமை மறுக்கப்படக் கூடாது.

எனவே வரும் டிச.15 முதல் 29 வரை 2 வாரம் அவருக்கு பரோல் வழங்க வேண்டும். அவர் தப்பிவிடாமல் இருக்க தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை யும் செய்ய வேண்டும்’ என உத்தரவிட்டுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in