Published : 14 Dec 2018 08:12 AM
Last Updated : 14 Dec 2018 08:12 AM

புதுக்கோட்டை மாவட்டத்தில் புயலில் சாய்ந்த தென்னை மரங்களை மீண்டும் நடும் பணி தீவிரம்

புயலால் வேரோடு சாய்ந்த தென்னை மரங்களை மீண்டும் நடும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.

கஜா புயலின் கோரத் தாண்டவத்தால் புதுக்கோட்டை மாவட்டத்தில் மட்டுமே சுமார் 10 லட்சம் தென்னை மரங்கள் சாய்ந்தன.

இதேபோன்று தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள் ளிட்ட மாவட்டங்களிலும் லட்சக் கணக்கான தென்னை மரங்கள் சாய்ந்தன. முறிந்த மரங்களை அகற்றும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

வெளி மாவட்டங்களில் இருந்து வந்து விலையில்லாமல் தென்னை மரங்களைச் சிலர் தங்களது தேவைக்கு ஏற்ப வெட்டிச் செல் கின்றனர்.

இந்நிலையில், வேரோடு சாய்ந்த மரங்களை மீண்டும் நடவு செய்தால் காய்க்கும் என சமூக வலைதளங்களில் தகவல் பரவியதைத் தொடர்ந்து, புதுக்கோட்டை மாவட்டத்தில் சாய்ந்த மரங்களை நடுவதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இதுகுறித்து செரியலூரில் வேரோடு சாய்ந்த மரங்களை அதே தோட்டத்தில் மீண்டும் நடவு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள ஆறுமுகம் தலைமையிலான விவசாயிகள் கூறியதாவது:

புயலால் முறிந்த மரங்களை வெட்டி அப்புறப்படுத்தவே மரத்துக்கு ரூ.1000 வீதம் செலவாகிறது. வேரோடு சாய்ந்த மரங்களை வெட்டி அப்புறப்படுத்தாமல் மீண்டும் நடவு செய்தால் மீண்டும் காய்க்கும் என வாட்ஸ்அப் மூலம் தகவல் வந்தது. இதை நம்பி மரங்களை நடவு செய்து வருகிறோம்.

இதற்காக சுமார் 15 ஆண்டுகளுக்குள்ளான, வேரோடு சாய்ந்த மரங்களின் மட்டைகளை நீக்கிவிட்டு, பொக்லைன் இயந்திரம் மூலம் சுமார் 10 அடி குழி தோண்டி அதில், பூச்சிக்கொல்லி மருந்து தெளித்து, இடுபொருட்கள் இட்டு மரம் நடப்படுகிறது. நாளொன்றுக்கு அதிகபட்சமாக 20 மரங்கள் நடப்படுகின்றன. இதற்கு மரத்துக்கு தலா ரூ.1000 வீதம் செலவாகிறது. பரீட்சார்த்த முறையில்தான் இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.வேரோடு சாய்ந்த மரங்களை வெட்டி அப்புறப்படுத்தாமல் மீண்டும் நடவு செய்தால் மீண்டும் காய்க்கும் என வாட்ஸ்அப் மூலம் தகவல் வந்தது. இதை நம்பி மரங்களை நடவு செய்து வருகிறோம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x