பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரூ.484 கோடியில் 1.56 கோடி குடும்பங்களுக்கு இலவச வேட்டி, சேலை விநியோகம்; முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரூ.484 கோடியில் 1.56 கோடி குடும்பங்களுக்கு இலவச வேட்டி, சேலை விநியோகம்; முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்
Updated on
1 min read

பொங்கல் பண்டிகையை முன் னிட்டு 1.56 கோடி குடும்பங்களுக்கு ரூ.484 கோடி 25 லட்சம் செலவில் இலவச வேட்டி, சேலைகள் வழங் கும் திட்டத்தை முதல்வர் கே.பழனி சாமி தொடங்கி வைத்தார்.

கைத்தறி நெசவாளர்களுக்கு ஆண்டு முழுவதும் வேலைவாய்ப்பு வழங்கி, அவர்களது வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் நோக்கில் ஏழை மக்களுக்கு இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டம் 1983-ல் அப்போதைய முதல்வர் எம்ஜிஆரால் தொடங்கப்பட்டது. அதன்படி, ஆண்டுதோறும் தமிழர் திருநாளான பொங்கல் பண்டி கையை முன்னிட்டு இலவச வேட்டி, சேலைகள் வழங்கப்படுகின் றன. இதன்மூலம் ஏழை, எளிய மக்கள் பயன்பெறுவதோடு, கைத்தறி, விசைத்தறி தொழில் களில் ஈடுபட்டுள்ளோருக்கு வேலைவாய்ப்பும் கிடைக்கிறது.

இந்நிலையில், 2019 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இலவச வேட்டி, சேலைகள் வழங்கும் திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு ரூ.484 கோடியே 25 லட்சம் செலவில், 1 கோடியே 56 லட்சத்து 54 ஆயிரம் சேலைகள், 1 கோடியே 56 லட்சத்து 44 ஆயிரம் வேட்டிகள் வழங்கப்பட உள்ளன.

சென்னை தலைமைச் செயல கத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் 5 குடும்பங்களுக்கு இலவச வேட்டி, சேலைகளை முதல்வர் பழனிசாமி வழங்கி இத்திட்டத்தை தொடங்கி வைத்தார். கைத்தறி, துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன், வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், வருவாய்நிர்வாக ஆணையர் சத்யகோபால், ஜவுளித் துறை செயலாளர் குமார் ஜெயந்த், சென்னை மாவட்ட ஆட்சியர் ஏ.சண்முகசுந்தரம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பொங்கல் பரிசு

பொங்கல் பண்டிகையை முன் னிட்டு அனைத்து குடும்ப அட்டை தாரர்கள் மற்றும் முகாம்களில் தங்கியுள்ள இலங்கைத் தமிழர் குடும்பங்களுக்கு 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, 2 அடி நீள கரும்புத் துண்டு, 20 கிராம் முந்திரி, 20 கிராம் உலர் திராட்சை, 5 கிராம் ஏலக்காய் ஆகிய 6 பொருட் கள் அடங்கிய சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட உள் ளது. பொங்கல் பண்டிகைக்கு முன் பாகவே சம்பந்தப்பட்ட நியாய விலைக் கடைகள் மூலம் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி ஏற் கெனவே அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in