Published : 26 Dec 2018 10:14 AM
Last Updated : 26 Dec 2018 10:14 AM

ரூ.900 கோடியில் விரிவாக்கப் பணிகள் தீவிரம்: 200 கி.மீ. வேக ரயில் தயாரிக்க ஐசிஎஃப் இலக்கு - செயலாளர் கே.என்.பாபு தகவல்

ஆண்டுக்கு 3,750 ரயில் பெட்டிகள் தயாரிக்கும் வகையில் பெரம்பூர் ஐசிஎஃப் வளாகத்தில் ரூ.900 கோடியில் விரிவாக்கப் பணிகள் நடந்து வருகின்றன. அடுத்தகட்ட மாக 200 கி.மீ. வேகத்தில் ஓடும் புதிய ரயில் தயாரிக்கப்பட உள்ளது என்று ஐசிஎஃப் செயலாளர் கே.என்.பாபு தெரிவித்துள்ளார்.

சென்னை இணைப்பு பெட்டி தொழிற்சாலையில் (ஐசிஎஃப்) முதல்முறையாக உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரிக்கப் பட்ட அதிநவீன ‘ரயில் 18’ விரைவு ரயில் மணிக்கு 180 கி.மீ. வேகத் தில் இயக்கி சோதனை நடத்தப் பட்டுள்ளது. இந்த புதிய ரயில் டெல்லி - வாரணாசி இடையே 160 கி.மீ வேகத்தில் இயக்கப்பட உள்ளது.

இன்ஜின் தனியாக இல்லாமல், பெட்டிகளுடன் இணைக்கப்பட் டிருப்பது இதன் சிறப்பம்சம். இது மட்டுமின்றி, பல்வேறு நவீன வசதிகளுடன் கூடிய இந்த ரயில் பயணிகள் மத்தியில் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால், ஐசிஃஎப் நிறுவனம் அடுத்தகட்ட வளர்ச்சியை நோக்கி பயணிக்க தொடங்கிவிட்டது.

இதுதொடர்பாக ‘இந்து தமிழ்’ நாளிதழுக்கு ஐசிஎஃப் நிறுவனத் தின் செயலாளர் கே.என்.பாபு அளித்த சிறப்பு பேட்டி:

‘ரயில் 18’ உருவானது எப்படி?

உள்நாட்டு தொழில்நுட்பத்தில் அதிவேக ரயிலை தயாரித்து இயக்க ரயில்வே வாரியம் முடிவு செய்தது. அதற்கான திட்டம் ஐசிஎஃப் நிறுவனத்துக்கு அளிக்கப்பட்டது. இந்த ரயில் தயாரிக்கப்பட்டு 2018-ல் வெளிவரும் என்பதால், ‘ரயில் 18’ என பெயரிடப்பட்டது. வடிவமைப்பு பணிகளையும் சேர்த்து மொத்தம் 18 மாதங்களில் ரயில் தயாரிக்கப்பட்டு ரயில்வே வாரியத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

தற்போது மணிக்கு 180 கி.மீ. வேகத்தையும் தாண்டி சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு, வெற்றி கண்டுள்ளது. விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு வரவுள்ளது. இது சிறந்த தயாரிப்பாக இருப்பதால், இதேபோல மேலும் 4 ரயில்கள் தயாரிக்க வாரியம் உத்தரவிட்டுள் ளது.

ஐசிஎஃப் ஆலையில் புல்லட் ரயில் தயாரிக்க முடியுமா?

புல்லட் ரயில் தயாரிப்பில் சிக்கல் எதுவும் இல்லை. பொறியி யல் தொழில்நுட்பத்தை இன்னும் கொஞ்சம் மேம்படுத்தினால், ஐசிஎஃப்-ல் தயாரித்துவிடலாம். ஆனால், புல்லட் ரயிலை இயக்கு வதற்கான தண்டவாள கட்டமைப்பு தான் முதல் தேவை. 160 கி.மீ. வேக ரயில்களை இயக்கவே குறைந்த வழித்தடங்கள்தான் இருக்கின்றன. அதனால், புல்லட் ரயில் என்பது நமது உடனடி தேவை இல்லை. மும்பை - அகமதாபாத் போன்ற சில வழித்தடங்களில் அதிவேக ரயில்களை இயக்க, தண்டவாள கட்டமைப்பை வாரியம் மேம்படுத்தி வருகிறது.

அதிநவீன ரயில்கள், பெட்டி களை தெற்கு ரயில்வேக்கு வழங்கு வதில்லை என்ற குற்றச்சாட்டு இருக்கிறதே?

ரயில்வே வாரியத்தின் உத்தர வுப்படி ரயில்கள், ரயில் பெட்டி களை தயாரிக்கிறோம். அவற்றை யாருக்கு, எப்போது வழங்குவது என்று வாரியம்தான் முடிவு செய்கிறது. இதில், நாங்கள் எது வும் கூற முடியாது. இருப்பினும், உண்மையாகவே தேவை இருக் கும்போது, தெற்கு ரயில்வேக்கு ரயில்கள், பெட்டிகள் அளிக்கப்படு கின்றன.

சமீபத்தில் தயாரிக்கப்பட்ட சொகுசு பெட்டிகள் கொண்ட ‘தேஜஸ்’ ரயில், தெற்கு ரயில்வே யிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இது சென்னை எழும்பூர் - மதுரைக்கு விரைவில் இயக்கப்பட உள்ளது.

ஐசிஎஃப்-ன் அடுத்த தயாரிப்பு என்ன?

சமீபத்தில் உருவாக்கப்பட் டுள்ள ‘ரயில் 18’ பெரும் வர வேற்பை பெற்றுள்ளது. எனவே, அதில் சில மாற்றங்கள் செய்து 200 கி.மீ. வேகத்தில் ஓடும் புதிய ரயிலை தயாரிக்க உள்ளோம். அதேபோல, ‘ரயில் - 2020’ என்ற அதிநவீன ரயிலையும் தயாரிக்க உள்ளோம். இதுவும் 160 கி.மீ. வேகத்தில் செல்லும். இதில், பயணிகளுக்கான வசதியை மேம் படுத்த உள்ளோம். முழுவதும் அலுமினியத்தால் ரயில் பெட்டிகள் தயாரிக்கப்படும். எடை குறைவு என்பதால், எரிசக்தி மிச்சமாகும். அதிர்வுகள் இல்லாமல், பயணிகள் சொகுசாக பயணம் செய்யலாம்.

புத்தாண்டில் ஐசிஎஃப்-ன் திட்டம் என்ன?

பெரம்பூர் ஐசிஎஃப் வளாகத் தில் ரூ.900 கோடியில் விரிவாக் கப் பணிகள் நடந்து வருகின்றன. மேலும் பல புதிய ரயில்கள், பெட்டிகளை தயாரிக்கும் வகையில் சிறந்த தொழில்நுட்பத்தில் செயல் படும் புதிய வகை இயந்திரங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதற்கான பணி ஓராண்டாக நடந்து வருகிறது. இப்பணி 2019 இறுதியில் முடியும். அப்போது, ஆண்டுக்கு 3,750 ரயில் பெட்டிகள் தயாரிக்க முடியும். புதிய வகை மின்சார, பயணிகள் ரயில்களும் தயாரிக்கப்படும். பயணிகள் ரயில், பெட்டிகள் ஏற்றுமதியும் அதிகரிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x