

தருமபுரி மாவட்டம் முழுமைக்கும் சீராக ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் வழங்கப்படவில்லை எனில் செப்டம்பர் 19-ம் தேதி போராட்டம் நடத்தப்படும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
தருமபுரி எம்.பி. அன்புமணி நேற்று தருமபுரி மாவட்டம் நல்லம் பள்ளி ஒன்றியத்துக்கு உட்பட்ட தடங்கம் உள்ளிட்டப் பகுதிகளில் பலவிதமான நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அப்போது அன்புமணி பேசியதாவது:
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் பின்புறம் ரயில் பாதையைக் கடக்க, இரு சக்கர வாகனங்கள் மட்டுமே நுழையும் வகையில் மிகக் குறுகிய பாலம் ஒன்று உள்ளது. ஆனால் அப்பகுதி யில் சமீப காலமாக குடியிருப்புகள் அதிக அளவில் பெருகிவிட்ட நிலை யில் பொதுமக்கள் போக்குவரத் துக்கு சிரமப்படுகின்றனர். எனவே அப்பகுதியில் பாலம் அமைத்துத் தரும்படி ரயில்வே அமைச்சரிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அங்கு பாலம் உருவாகத் தொடர்ந்து பாமக சார்பில் முயற்சிகள் எடுக்கப்படும்.
மேலும், தருமபுரி மாவட்டம் முழுமைக்கும் ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் சரிவர விநியோகம் செய்யப்படவில்லை. மாவட்ட மக்களை புளூரோஸிஸ் பாதிப்பில் இருந்து மீட்கத்தான் ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால், அந்த திட்டத் தின் மூலம் அனைத்து மக்களுக்கும் குடிநீர் போய்ச் சேரவில்லை. பல இடங்களில் போர்வெல் தண்ணீரையும், ஒகேனக்கல் தண்ணீரையும் கலந்து விநியோகம் செய்கின்றனர். சில இடங்களில் ஒகேனக்கல் குடிநீர் இன்றளவும் எட்டிக் கூட பார்க்கவில்லை.
எனவே, ஒகேனக்கல் கூட்டுக்குடி நீரை மாவட்ட மக்கள் அனைவருக் கும் கொண்டுசேர்க்க மாவட்ட நிர் வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இல்லையெனில் செப்டம்பர் 19-ம் தேதி தருமபுரி ஆட்சியர் அலுவலகம் முன்பு பாமக சார்பில் மாபெரும் போராட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அன்புமணி பேசினார்.