Published : 03 Dec 2018 09:45 AM
Last Updated : 03 Dec 2018 09:45 AM

அரசு முன்னாள் தலைமை வழக்கறிஞர் முத்துக் குமாரசாமி காலமானார் - முதல்வர் இரங்கல்

தமிழக அரசின் முன்னாள் தலைமை வழக்கறிஞர் ஆர்.முத்துக்குமாரசாமி (70) உடல் நலக் குறைவால் நேற்று கால மானார். அவரது மறைவுக்கு முதல்வர் பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

கடந்த 2016-ம் ஆண்டு தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக இருந்த ஏ.எல்.சோமயாஜி ராஜி னாமா செய்த பிறகு அதே ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆர்.முத்துக் குமாரசாமி அரசு தலைமை வழக் கறிஞராக நியமிக்கப்பட்டார். தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த வரான இவர், கடந்த 1994-ல் தமி ழக அரசின் கூடுதல் வழக்கறி ஞராகவும், பிறகு தமிழக அரசு வழக்கறிஞராகவும், கடந்த 2001-ம் ஆண்டு முதல் 2006-ம் ஆண்டு வரை தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞராகவும் பணியாற்றியுள்ளார். மேலும் மெட்ராஸ் பார் அசோசியேஷன் தலைவராகவும் பதவி வகித்துள் ளார்.

அரசின் தலைமை வழக்கறிஞராக நியமிக்கப்பட்டதில் இருந்து பல்வேறு முக்கிய முடிவுகளை அவர் எடுத்துள்ளார். குறிப்பாக ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் உள்ள பேரறிவாளனுக்கு பரோல் வழங்கலாம் என்ற பரிந்துரையை அரசுக்கு அளித்தார். உடல் நிலையைக் காரணம் காட்டி கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தனது பதவியை அவர் ராஜினாமா செய்தார்.

உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் நேற்று காலை காலமானார். இதைத்தொடர்ந்து ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள அவரது இல்லத்துக்கு உடல் கொண்டு செல்லப்பட்டது. இறுதி நிகழ்வுகள் இன்று கைலாசபுரம் மின்மயானத்தில் பிற்பகல் 3 மணியளவில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முத்துக்குமாரசாமியின் மறை வுக்கு இரங்கல் தெரிவித்து முதல்வர் கே.பழனிசாமி நேற்று வெளியிட்ட அறிக்கையில், “வழக் கறிஞர் முத்துக்குமாரசாமி கால மானார் என்ற செய்தியை அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். கடின உழைப்பாலும், திறமையான வாதத்தாலும் நீதித்துறையில் தனக்கென தனி இடத்தைப் பெற்றவர் அவர். திறமையான வாதத்தால் பல வழக்குகளில் வெற்றி பெற்றவர். அவரது மறைவு நீதித்துறைக்கு பெரிய இழப்பாகும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x