Published : 06 Dec 2018 08:37 AM
Last Updated : 06 Dec 2018 08:37 AM

நிலக்கோட்டை அருகே போலி மது அருந்திய 2 தொழிலாளர்கள் உயிரிழப்பு; ஒருவர் கவலைக்கிடம்: 3 பேர் கைது

நிலக்கோட்டை அருகே போலி மது அருந்திய கூலித் தொழிலாளர்கள் இருவர் உயிரிழந்தனர். ஒருவர் நிலை கவலைக்கிடமாக உள்ளது. போலி மது விற்ற 3 பேரை போலீ ஸார் கைது செய்துள்ளனர். போலி மது விற்பனை குறித்து புகார் அளித் தும் போலீஸார் உரிய நடவடிக்கை எடுக்காததே அப்பாவி உயிர்கள் பலியானதற்கு காரணம் என குற் றச்சாட்டு எழுந்து உள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் நிலக் கோட்டை அருகே பள்ளபட்டி கிராமத்தில், கவுண்டன்பட்டி பிரிவு என்ற இடத்தில் உள்ள ஒரு வீட்டில் கடந்த சில மாதங்களாக போலி மது பாட்டில்கள் விற்பனை 24 மணி நேரமும் நடந்து வந்ததாக கூறப் படுகிறது. இங்கேயே `பார்' போன்று மது அருந்துவதற்கான வசதியும் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், பள்ளபட்டி கிராமத்துக்கு அருகேயுள்ள சாண்டிலார்புரத்தைச் சேர்ந்த சமயன் (60), கவுண்டன்பட்டியைச் சேர்ந்த முருகன் (40), பாஞ்சாலங் குறிச்சியைச் சேர்ந்த தங்கப்பாண்டி (32) ஆகிய 3 கூலித் தொழிலாளர் கள் நேற்று அதிகாலை 5 மணிக்கு இங்கு மது வாங்கிக் குடித்தனர். 5.30 மணிக்கு அங்கிருந்து வெளியே றியபோது அதே இடத்தில் மூவரும் சுருண்டு விழுந்தனர். இதில் முருகன் அந்த இடத்திலேயே உயிரிழந்தார். மற்ற இருவரையும் மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சமயன் சிகிச்சை பலனின்றி இறந்தார். தங்கப்பாண்டி மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவரது நிலை கவலைக்கிடமாக உள்ளது.

தகவலறிந்த தென்மண்டல ஐ.ஜி. சண்முக ராஜேஸ்வரன், திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்திவேல் ஆகி யோர் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினர். போலி மது விற்ற பள்ளபட்டியைச் சேர்ந்த ஜெயச்சந்திரன், கண்ணன், செல்வம் ஆகிய 3 பேரை போலீ ஸார் கைது செய்தனர்.

நடவடிக்கை இல்லை

இதுகுறித்து முன்னதா கவே புகார் அளித்த பள்ளபட்டி யைச் சேர்ந்த சமூக ஆர்வலர் கிருஷ்ணமூர்த்தி கூறும்போது, "போலி மது அருந்தி உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதால் தற்போது இந்தப் பிரச்சினை பூதாகரமாகியுள்ளது. பள்ளபட்டி பகுதியில் போலி மது அருந்திய சிலர் கண் பார்வை இழந்தும், கை, கால்கள் செயல் இழந்த நிலையிலும் உள்ளனர். போலி மது விற்பனை செய்வோர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி செப்.20-ம் தேதி மாநில உள்துறைச் செயலாளர், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண் காணிப்பாளர் ஆகியோருக்கு புகார் மனு அனுப்பி வைக்கப் பட்டது.

ஆனால், போலீஸாரின் கண் துடைப்பு நடவடிக்கையால் போலி மது விற்பனை தொடர்ந்தது. கடும் நடவடிக்கை எடுத்திருந் தால் அப்பாவித் தொழிலாளர்க ளின் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டி ருக்கும்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x