சென்னை, புறநகரில் 6 புதிய ஆர்டீஓ அதிகாரிகள் நியமனம்

சென்னை, புறநகரில் 6 புதிய ஆர்டீஓ அதிகாரிகள் நியமனம்
Updated on
1 min read

‘இந்து தமிழ்’ செய்தி எதிரொலி யாக, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 6 வட்டாரப் போக்குவரத்து அலுவலகங் களுக்கு புதிய ஆர்டீஓ அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தாம்பரம், செங்கல் பட்டு, சோழிங்கநல்லூர், குன்றத் தூர், அம்பத்தூர், கே.கே.நகர் ஆகிய வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் போக்குவரத்து அலுவலர் (ஆர்டீஓ) பணியிடங் கள் காலியாக இருந்தன. இதனால் அருகில் உள்ள ஆர்டீஓ அதிகாரிகள் கூடுதல் பணி செய்யவேண்டி இருந்தது.

இதன் காரணமாக, உரிமம் புதுப்பித்தல், மாற்றம் செய்தல், வாகனப் பதிவு, பெயர் மாற்றம், பைனான்ஸ் வாகனங்கள் பதிவு மற்றும் ரத்து செய்தல் உள்ளிட்ட பணிகள் தாமதமாகின. இதனால் மக்கள் பலமுறை அலையவேண்டி இருந்தது.

மேற்கண்ட 6 அலுவலகங் களில் ஆர்டீஓ பணியிடம் காலியாக இருப்பதால் பணிகள் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், மோட்டார் வாகன போக்கு வரத்து துறையில் காலிப் பணியிடங்களை நிரப்ப அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் ‘இந்து தமிழ்’ நாளிதழில் கடந்த மாதம் செய்தி வெளியானது.

இதைத் தொடர்ந்து, 6 அலுவல கங்களிலும் ஆர்டீஓ பணியிடங் களை நிரப்ப போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். அதன்படி, தாம்பரம் - துரை, செங்கல்பட்டு - நடராஜன், சோழிங்கநல்லூர் - திருவள்ளு வன், குன்றத்தூர் - பார்வேந்தன், அம்பத்தூர் - ஜெய்குமார், கே.கே. நகர் - சுந்தரமூர்த்தி ஆகிய 6 ஆர்டீஓ அதிகாரிகள் நியமிக்கப் பட்டுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in