கொலுசு அணிவது குறித்து அமைச்சர் கருத்து

கொலுசு அணிவது குறித்து அமைச்சர் கருத்து
Updated on
1 min read

ஈரோடு மாவட்டம் கோபியில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஜனவரி மாதம் சிறப்பு ஆசிரியர்கள் புதிதாக நியமிக்கப்பட உள்ளனர். நீட் தேர்வுக்கு இந்த ஆண்டு 26 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

கஜா புயல் காரணமாக விண்ணப்பம் செய்ய காலக்கெடு நீட்டிக்கப்பட்டு உள்ளது. 8-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு நடைபெற உள்ள தேசிய திறன் பயிற்சி கஜா புயல் காரணமாக வருகிற 15-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.மாணவர்கள் பள்ளிக்கு விலை மதிப்புமிக்க அணிகலன்கள் அணிந்து வருவதை தவிர்க்க வேண்டும் என்றார்.

அப்போது, செய்தியாளர்கள், மாணவியர் பூ வைக்கவும், கொலுசு அணியவும் பள்ளிக்கல்வித்துறை தடை விதித்துள்ளதா என்று கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அமைச்சர், வெள்ளிக் கொலுசுகளை மாணவியர் அணிந்து வந்தால் கவனச் சிதறல் ஏற்படும். மாணவிகள் பூ வைத்து வர எந்த தடையும் இல்லை என்றார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in