

சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியது:
தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய குமரிக் கடல் பகுதியில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வுநிலை தற்போது குமரிக்கடல் மற்றும் இந்தியப் பெருங்கடல் பகுதியில் நிலவி வருகிறது.
அதன் காரணமாக அடுத்த இரு நாட்களுக்கு தென் தமிழகத்தில் சில இடங் களிலும், வட தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களிலும் மிதமான மழை நீடிக்க வாய்ப்புள்ளது.
ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாகநாகை மாவட்டம் ஆணைக்காரன் சத்திரத்தில் 4 செமீ, கடலூர் மாவட்டம் சிதம்பரம், சேத்தியாத் தோப்பு, ஸ்ரீமுஷ்ணம், ராமநாத புரம் மாவட்டம் பாம்பன் உள் ளிட்ட இடங்களில் தலா 3 செமீ மழை பதிவாகியுள்ளது.