வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் கார்கள் முதன்முறையாக ரயில் மூலம் சென்னை துறைமுகத்துக்கு வருகை

வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் கார்கள் முதன்முறையாக ரயில் மூலம் சென்னை துறைமுகத்துக்கு வருகை
Updated on
1 min read

வௌிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் கார்கள் முதன்முறையாக சென்னை துறை முகத்துக்கு சரக்கு ரயில் மூலம் கொண்டு வரப் பட்டுள்ளது. இதன் மூலம், சாலை மார்க்கத்தில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் மற்றும் சுற்றுச்சூழல் மாசடைவது குறையும் என துறைமுக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஹுண்டாய் மோட்டார் நிறுவனம் உற்பத்தி செய்யும் கார்கள் சாலை மார்க்க மாக சென்னை துறைமுகத்துக்கு கொண்டு வரப்பட்டு பின்னர் கப்பல் மூலம் வௌிநாடு களுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன.

துறைமுக நிர்வாகம், கார்களை சரக்கு ரயில் மூலம் கொண்டு வருவதற்கான வசதிகளை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, ஹுண்டாய் நிறுவனத்தின் 227 கார்கள் ஸ்ரீபெரும்புதூரை அடுத்துள்ள வாலாஜா ரயில் நிலையத்தில் இருந்து சரக்கு ரயில் மூலம் சென்னை துறைமுகத்துக்கு கடந்த மாதம் 28-ம் தேதி கொண்டு வரப்பட்டன.

பின்னர், துறைமுகத்தில் ரூ.37 கோடி செல வில், 1 லட்சத்து 15 ஆயிரம் சதுர அடி பரப் பளவில் கட்டப்பட்டுள்ள புதிய கான்கிரீட் பார்க் கிங் யார்டில் இந்தக் கார்கள் இறக்கி வைக்கப் பட்டன. பின்னர், அவை நேற்றுமுன்தினம் கப்பல் மூலம் வௌிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. ரயில் மூலம் கார்களை கொண்டு வந்ததற்காக, ஹுண்டாய் நிறுவனத் துக்கு, சென்னை துறைமுக பொறுப்புக் கழகத்தின் தலைவர் ரவீந்திரன் பாராட்டு தெரிவித்தார்.

ரயில்கள் மூலம் கொண்டு வரப்படுவதால், சாலை மார்க்கத்தில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் மற்றும் சுற்றுச்சூழல் மாசடைவது குறையும் என துறைமுக நிர்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in