

நாளை திமுக தலைவர் கருணாநிதி சிலை திறக்கப்படும் நிலையில் எச்.ராஜா சர்ச்சைக்குரிய வகையில் ட்வீட் போட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திமுக தலைவர் கருணாநிதியின் சிலை அண்ணா அறிவாலயத்தில் நிறுவப்பட்டுள்ளது. சிலையை காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி நாளை திறந்து வைக்கிறார். இந்த விழாவில் சந்திரபாபு நாயுடு, பினராயி விஜயன் உள்ளிட்ட முக்கிய எதிர்க்கட்சித்தலைவர்கள் கலந்துக்கொள்கின்றனர். கமல், ரஜினியும் கலந்துக்கொள்கின்றனர்.
பின்னர் நந்தனம் ஒய்.எம்.சி.ஏவில் பொதுக்கூட்டம் நடக்கிறது. இந்த விழாவை குறிப்பிட்டு பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா வழக்கம்போல் ட்விட்டரில் புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளார். அதில் “உயிரற்ற படேலுக்கு சிலையா என்று நேற்று கேள்வி எழுப்பினார்கள் நாளை?” என கேள்வி எழுப்பியுள்ளார்.
பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா வழக்கம்போல் ட்விட்டரில் புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளார். அதில் உயிரற்ற படேலுக்கு சிலையா எனக்கேட்டு நாளை என கேள்வி எழுப்பியுள்ளார்.
இதற்கு நெட்டிசன்கள் அவரை வறுத்தெடுத்து வருகின்றனர். சர்தார் வல்லபாய் பட்டேல் சிலையை சுமார் 3000 கோடி ரூபாய் செலவில் அமைத்தது விமர்சனத்துக்குள்ளானது. மக்களின் வரிப்பணத்தில் இவ்வளவு பொருட்செலவில் சிலை தேவையா? என்ற விமரசனம் வைக்கப்பட்டது.
இதைக்குறிப்பிட்டு கருணாநிதியின் சிலையையும், படேல் சிலையையும் ஒப்பிட்டு எச்.ராஜா ட்வீட் போட்டுள்ளார். இதற்கு அவரது பதிவுக்கு கீழ் பெரும்பாலானோர் கடுமையாக சாடியுள்ளனர். அதில் படேல் சிலை மக்கள் வரிப்பணத்தில் உருவாக்கப்பட்டது, இது அவர்கள் சொந்தப்பணம் இதையும் அதையும் எப்படி ஒப்பிடலாம் என்கிற பொருளில் அநேகர் கேள்வி எழுப்பியுள்ளனர்.
தமிழகத்தின் அரசியலில் 50 ஆண்டு காலம் தாக்கத்தை ஏற்படுத்திய அரசியல் தலைவர் அவரது சிலைத்திறப்பில் பாஜக சற்று நாகரீகமாக நடக்கலாம் என அரசியல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.