

அரசுப் பள்ளிகளில், கடந்த 2009-ம் ஆண்டு மே- 31ம் தேதி நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ஒரு ஊதியமும், அதே ஆண்டு ஜூன் 1-ம் தேதி நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு, மற்றொரு ஊதிய மும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு நாள் வித்தியாசத்தில், அடிப்படை ஊதியத்தில், ரூ.3,170 குறைந்துள் ளது. ஒரே கல்வி தகுதி, ஒரே பணியில் உள்ள இந்த வேறுபாட்டைக் களைய வேண்டும் என்று இடைநிலை ஆசிரியர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தனர்.
ஊதிய முரண்பாடுகளை களையக் கோரி வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்ததைத் தொடர்ந்து, சமீபத்தில் பள்ளிக் கல்வித் துறைச் செயலர் பிரதீப் யாதவ் சங்க நிர்வாகிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால், பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந் தது. தொடர்ந்து அவர்கள் டிச.25-ம் தேதி முதல் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்தனர்.
இதையடுத்து, நேற்று தலைமைச் செயலகத்தில் மீண்டும் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், செயலர் பிரதீப் யாதவ், தொடக்கக் கல்வி இயக்குநர் ஆகியோர் இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் இயக்க நிர்வாகிகள், ரெக்ஸ் அனந்தகுமார், ராபர்ட் உள்ளிட்டோரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், அதில் உடன்பாடும் எட்டப்படாமல் தோல்வியில் முடிந்தது.
இதுதொடர்பாக, இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர் இயக்கம் பொதுச்செயலாளர் ராபர்ட் கூறும் போது, ‘‘அரசு தரப்பில் 2 முறை எழுதித் தந்த உத்தரவாதக் கடிதத்தை அவர்கள் பின்பற்ற வில்லை. தற்போது மீண்டும் என்ன கோரிக்கை என்று எங்களிடம் கேட்கின்றனர். இதனால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துவிட்டது. அரசுத் தரப்பில் மீண்டும் காலதாமதப்படுத்துவதாக தோன்றுகிறது. எனவே இப்போதி லிருந்தே உண்ணாவிரதப் போராட் டத்தை டிபிஐ வளாகத்தில் தொடங்கி உள்ளோம்’’ என்றார்.
உண்ணாவிரதத் போராட்டத்தை டிபிஐ வளாகத்தில் தொடங்கியதும், 235 பெண்கள் உட்பட 600-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்