தமிழகம்
ஜெ.வுக்கு ஆதரவாக நாளை மனிதச் சங்கிலி
ஜெயலலிதாவுக்கு ஆதரவு தெரிவித்து சென்னையில் அதிமுக சார்பில் நாளை மனிதச் சங்கிலிப் போராட்டம் நடத்தப்படுகிறது.
ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பு வெளியானதை அடுத்து, முதல்வர் பதவியை அவர் இழந்தார். இந்நிலையில், அவருக்கு ஆதரவு தெரிவித்து சென்னையில் அதிமுக சார்பில் நாளை (புதன்) மனிதச் சங்கிலிப் போராட்டம் நடக்கவுள்ளது.
ஜெயலலிதாவின் இல்லம் அமைந்துள்ள போயஸ் கார்டன் முதல் அதிமுக தலைமை அலுவலகம் அமைந்துள்ள லாயிட்ஸ் சாலை வரை காலை 9 மணி அளவில் நடக்கவுள்ள மனிதச் சங்கிலியில் பங்கேற்குமாறு அனைத்து தரப்பு மக்களுக்கும் அதிமுக சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
